வீடியோ: கடைசியில் கோட்டைவிட்ட சஞ்சு சாம்சன்.. இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா என லுக் விட்ட ஹர்திக் பாண்டியா..! நல்லா பண்ணியும் இப்படி ஆகிடுச்சே சஞ்சு பாய்!

0
630

தரமான கேட்ச் பிடித்துவிட்டு கடைசி நேரத்தில் கையிலிருந்து பந்தை நழுவிட்டார் சஞ்சு சாம்சன். கேசுவலாக லுக் விட்டு கண்டுகொள்ளாதது போல பவுலர் ஹர்திக் பாண்டியா நகர்ந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில், டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்துவீச முடிவு செய்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் இசான் கிஷன் 37 ரன்கள் அடித்து நம்பிக்கையை கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா மிடில் ஓவர்களில் நம்பிக்கை கொடுத்து 29 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசியில் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் மற்றும் தீபக் ஹூடா இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை 160 ரன்கள் கடந்து எடுத்துச் சென்றனர்.

இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தது. இதில் ஹூடா 41(23) ரன்களும் அக்சர் பட்டேல் 31(20) ரன்களும் அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 162 க்கு 5 என இருந்தது.

- Advertisement -

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா முதல் ஓவர் வீசினார். இரண்டாவது பந்திலேயே இலங்கை அணியின் துவக்க வீரர் நிஷங்கா அடித்த பந்து மிட் ஆஃப் திசையை நோக்கி சென்றது.

அங்கு நின்று கொண்டிருந்த சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக கேட்ச் பிடித்தார். பந்தை பிடித்து கீழே விழும்பொழுது துரதிஷ்டவசமாக கையை விட்டு பந்து நழுவி சென்றது. சற்று கடுப்பான கேப்டன் ஹர்திக் பாண்டியா கண்டும் காணாதது போல கேசுகளாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பந்து வீசுவதற்கு நகர்ந்தார். சஞ்சு சாம்சன் செய்வதறியாமல் ஒரு நொடி நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு நகர்ந்து விட்டார் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

அதற்கு அடுத்த ஓவரிலேயே அறிமுக வீரர் சிவம் மாவி மிக சிறப்பாக போல்ட் செய்து நிசங்கா விக்கெட்டை வீழ்த்தினார். ஆகையால் சஞ்சு சாம்சன் கேட்சை தவறவிட்டு செய்த தவறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இலங்கை அணியை பொறுத்தவரை, கேப்டன் சனக்கா மட்டுமே 45 ரன்கள் அடித்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இறுதியில் போராடிய கருநரத்தனே, ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்றார். ஆனால் அவரால் வெற்றியை பெற்றுத்தர முடியவில்லை. கடைசியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை 160 க்கு ஆல்அவுட் ஆனது.

வீடியோ: