பாபர் அடிக்கிற ரன் வேஸ்ட் ; ஏன்னா இந்திய அணுகுமுறை இல்லை!

0
2422
Babar Azam

உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வந்தது. பாதுகாப்பு பிரச்சனையின் காரணமாக கிரிக்கெட் விளையாடும் பெரிய நாடுகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்து வந்தன. மேலும் அரசியல் காரணங்களால் மிகப் பெரிய வருவாயை ஈட்டி தரும் இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்து வந்தது!

இப்படியான காரணங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருமானம் இல்லாமல் பெரிய அளவில் பாதித்ததோடு, பொருளாதாரம் இல்லாததால் உள்நாட்டு கிரிக்கெட்டையும் வளர்க்க முடியவில்லை. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாக பாதிப்படைய செய்வதாக இருந்தது!

இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரமீஷ் ராஜா தலைவராக பொறுப்பேற்று, பாபர் ஆஸம் நட்சத்திர பேட்ஸ்மேனாக உருவெடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு உயிர் வர ஆரம்பித்தது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றன.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டிய நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறையால் பாகிஸ்தான் கிரிக்கெட் பின் நோக்கி செல்கிறது. தரமான ஆடுகளங்களை அமைக்காமலும், சிறப்பாக செயல்படாத வீரர்களை வெளியே அனுப்பி புதிய வீரர்களை உள்வாங்காத காரணத்தாலும் சர்ச்சைகள் கிளம்பி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா சமீபத்தில் பதவி விலக்கப்பட்டார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ” இந்தியா தனது சொந்த நாட்டின் அனுகூலங்களை பயன்படுத்தி நியூசிலாந்தை மிகச் சிறப்பாக வென்றது. மறுபுறம் தங்களின் சொந்த விருப்பத்திற்கு ஆடுகளங்களை உருவாக்கிய பாகிஸ்தான் உள்நாட்டில் நியூசிலாந்திடம் தொடரை பறிகொடுத்தது. உள்நாட்டுச் சூழலை சாதகமாக மற்ற அணிகள் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் பின்பற்ற வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இங்கிலாந்து இப்பொழுது நியூசிலாந்து பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. நாங்கள் முடிவு தெரியும்படி ஆடுகளத்தை அமைக்காதது இதற்கு காரணம்!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இப்போது நியூசிலாந்து உடன் இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தில் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு தந்து சோதிக்க உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் இதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. பாபர் ஆஸம் தொடர்ந்து 50, 60 ரகளை எடுத்தாலுமே இதனால் அணிக்கு எந்தப் பயனும் கிடையாது!” என்று அதிரடியாக பேசி இருக்கிறார்!