நாளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் யார் இருப்பார்கள்? – வாசிம் ஜாபர் கணிப்பு!

0
93
Wasim Jaffer

நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியும் ஹாங்காங் அணியும் முதல் சுற்றின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் சார்ஜா மைதானத்தில் மோதின. இதில் ஹாங்காங் அணியை 38 ரன்களில் சுருட்டி பாகிஸ்தான் அணி இமாலய வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.

இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறை இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைவது என்பது இப்போதைய காலகட்டத்தில் நிகழவே வாய்ப்பில்லாத ஒரு நிகழ்வாகும்.

- Advertisement -

ஆனால் இதில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக முழங்கால் காயத்தால் ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இடதுகை வீரரான ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் பேட்டிங்கில் அனுபவமும் பந்துவீச்சில் அனுபவம் இருக்கின்ற இடதுகை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் லெக் ஸ்பின், லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் வீசக்கூடிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை எதிர்கொள்ள ஒரு லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் அணியில் தேவை.

இந்த அடிப்படையில் பார்த்தால் ரவீந்திர ஜடேஜா காயத்தால் எதிர்பாராதவிதமாக தொடரில் இருந்து வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பின்னால் இவரின் பங்களிப்பு பெரியதாக இருந்தது. தற்போது இவருக்கு பதிலாக இன்னொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரும் பேட்ஸ்மேனுமான அக்ஷர் படேல் அணிக்குள் வந்திருக்கிறார். நாளை பாகிஸ்தான் அணியுடன் நடக்கும் போட்டியில் இந்திய அணி எவ்வாறு அமைக்கப்படும் என்று ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் கவனிக்கக் கூடிய அளவில் கிரிக்கெட் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிற வாசிம் ஜாபர் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு அவர் பதில் கூறும் பொழுது ” நான் தீபக் ஹூடா அணியில் இருக்க ஆசைப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் விரும்பும் பிராண்ட் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக. தற்போது பேட்டிங்கின் நீளம் நம்பர் 7 வரை இருக்கிறது. தீபக் ஹூடா அணிக்குள் வரும்பொழுது அது இன்னும் பலமாகும். இதனால் அவர் அணிக்குள் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவேன் மேலும் அவர் 2 ஓவர்களையும் வீசுவார்” என்று தெரிவித்தார்..

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” தீபக் ஹூடாவா இல்லை அக்சர் படேலா இதுதான் இந்திய அணியின் முன் இருக்கும் ஒரே கேள்வியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ரிஷப் பண்ட் ஆடும் அணியில் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை ஏனென்றால் இந்திய அணி தினேஷ் கார்த்திக்கோடு சென்றுவிட்டது. இதனால் தற்போது இந்திய அணியில் இடது கை பேட்டர் இல்லை. பாகிஸ்தான் அணியில் சதாப் கான், முகமது நவாஸ் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை தாக்கி விளையாட ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவை. இதனால் தீபக் ஹூடாவிற்கு பதில், இந்திய அணி அக்சர் படேல் இடம் செல்லும் ” என்று கூறியிருக்கிறார்!