பெங்களூர் தவிர இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவார்கள் – வாசிம் ஜாபர்

0
162
Wasim Jaffer about IPL Playoffs 2022

ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டங்கள் 90% முடிந்து, ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெறும் இரண்டு அணிகள் தெரியவந்துள்ளது என்றே கூறலாம். ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் மூன்றாவது, நான்காவது அணிகள் யாரென்பதுதான் தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரின் பரபரப்பான எதிர்பார்ப்பு மிக்க விசயமாக மாறியுள்ளது.

இந்த ஐ.பி.எல் தொடரின் புதிய வரவுகளான இரண்டு அணிகளில் குஜராத் அணி ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. லக்னோ அணியும் 12 ஆட்டங்களில் 8 ஆட்டங்களை வென்று 16 புள்ளிகளோடு தகுதி பெற்றுவிட்டது என்றே கூறலாம். அடுத்து வரும் இரு ஆட்டங்களில் ரன்ரேட்டை இழக்காமல் தோற்றால் கூட லக்னோவின் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்புக்கு பிரச்சினை இல்லை.

- Advertisement -

அதற்கடுத்த இடத்தில் ராஜஸ்தான் 12 ஆட்டங்களில் 7 ஆட்டங்களை வென்று 14 புள்ளிகளோடு இருக்கிறது. ரன் ரேட்
+0.228. அடுத்து இருக்கும் இரண்டு ஆட்டங்களில் ஒன்றை வென்று, ஒன்றில் ரன்ரேட் சரியாமல் தோற்றாலும் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருக்கிறது. பெங்களூர் அணி 13 ஆட்டங்களில் 7 ஆட்டங்களை வென்று 14 புள்ளிகளோடு, பலகீனமான -0.323 ரன்ரேட்டோடு இருக்கறது. இருக்கும் ஒரு போட்டியில் ஜெயித்தாலும் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு குறைவே.

இதற்கடுத்த ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் தலா 12 ஆட்டங்களில் விளையாடி, 6 ஆட்டங்களில் வென்று, 12 புள்ளிகளோடு டெல்லியும், பஞ்சாப் அணிகளும் உள்ளன. இவர்களின் ரன்ரேட் பிளசில் 0.210, 0.23 என்று இருக்கிறது. இதுதான் பெங்களூர் அணிக்குப் பின்னடைவை தருகிறது. இவர்கள் இருவரும் வரும் 16ஆம் தேதி மோதவுள்ளனர். இந்த ஆட்டத்தின் முடிவில் ஒரு அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி விடும். ஹைதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளோடு 10 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது. இவர்கள் அடுத்த மூன்று ஆட்டங்களில் வென்றால், இவர்களுக்கும் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிருக்கிறது.

அணிகளின் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் “ராஜஸ்தான் அடுத்த இரு ஆட்டங்களில் தோற்று, ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் இருந்து வெளியேறுவார்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் இரண்டில் ஒரு ஆட்டத்தையாவது வென்று ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் வருவார்கள். அடுத்து பஞ்சாப் இல்லை டெல்லி அணிகளில் ஒரு அணி, நான்காவது அணியாக ப்ளே-ஆப்ஸ்க்குள் நுழையும். ஆனால் பெங்களூர் அணி ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையாது என்றே நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்!

- Advertisement -