மோசமாக ஆடினாலும் சஹல்-க்கு இடமுண்டு.. 2 முக்கிய மாற்றங்கள்.. வெளியானது 2வது டி20 பிளேயிங் லெவன்!

0
3514

2வது டி20க்கான உத்தேச பிளேயிங் லெவனை கண்டித்துள்ளார் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். 2 மாற்றங்களை அந்த அணியில் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருப்பதால் இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது.

முதல் டி20 போட்டியில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன், பீல்டிங் செய்யும் பொழுது காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்கேன் செய்து பார்த்ததில் காயத்தின் தீவிரம் அதிகமாக இருக்கிறது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பெயரில், அடுத்த இரண்டு டி20 போட்டிகளுக்கும் அவர் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.

பெங்களூரில் உள்ள தேசிய அகடமிக்கு அனுப்பப்பட உள்ளார். மீதமுள்ள டி20க்கு சஞ்சு சாம்சன்-க்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய ஜித்தேஷ் சர்மா என்பவர் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச பிளேயிங் லெவனை தேர்வு செய்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வாஷிம் ஜாபர்.

முதல் டி20 போட்டியில் மோசமாக பீல்டிங் மற்றும் பவுலிங் செய்த சஹலை அவர் வெளியேற்றவில்லை. அதேபோல் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிப்பாதி உள்ளே எடுத்து வரப்படலாம் எனவும் தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார். அடுத்ததாக ஹர்ஷல் பட்டேல் வெளியில் அமர்த்தப்பட்டு அர்ஷதிப் சிங் உள்ளே எடுத்து வரப்படலாம் என்றும் தனது அணியில் கணித்துள்ளார்.

வாசிம் ஜாபரின் உத்தேச பிளேயிங் லெவன்:

சுப்மன் கில், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், ராகுல் திரிப்பாதி, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, அக்ஸர் பட்டேல், சஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி