விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவருரில் இவர்தான் சிறந்த டெஸ்ட் கேப்டன் – விளக்கம் அளிக்கும் வாசிம் ஜாஃபர்

0
33
Wasim Jaffer Virat Kohli and Rohit Sharma

இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றனர். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த லீக் தொடராக பார்க்கப்படும் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. வழக்கமாக 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்த முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிகள் தொடங்க இன்னமும் பத்து நாட்களுக்கு குறைவாகவே உள்ளதால் தற்போது அனைத்து அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மும்பை அணியின் கேப்டன் ரோகித்திற்கு இந்த தொடர் அவர் இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்பு கலந்துகொள்ளும் முதல் ஐபிஎல் தொடர் ஆகும்.

மேலும் சில மாதங்கள் கழித்து டி20 உலக கோப்பை தொடர் தொடங்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டன் ரோகித்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இவர் முழுநேர கேப்டன் ஆனது முதல் தற்போது வரை 14 போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. பலரும் இதனால் ரோஹித்தை பாராட்டி வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபரும் ரோகித்தின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜாபர் பேசும்போது ரோஹித் விராட் கோலியை விட சிறந்த கேப்டனாக இருப்பார் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ரோகித் எத்தனை போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என்பது தெரியவில்லை என்றும் ஆனால் அவர் இருக்கும் வரை மிகச்சிறந்த கேப்டனாக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து அணிகளையும் எளிதாக ஒயிட் வாஷ் செய்யும் அளவுக்கு ரோஹித்தின் தலைமைப் பண்பு சிறப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

விராட் கோலியிடம் இருந்து தலைமை பண்பு சிறப்பான கைகளுக்கு வந்து சேர்ந்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 68 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த கோடி அதில் 40 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று தந்துள்ளார். இதுவரை இந்தியாவுக்கு கிடைத்ததிலேயே சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தான் என்று பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். தற்போது அவனை விட சிறப்பாக ரோகித் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.