ரஷீத் கானுக்கு இடமில்லை ; வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ள சிறந்த 11 வீரர்கள் கொண்ட 2022 ஐபிஎல் அணி

0
102
Rashid Khan and Wasim Jaffer

கடந்த இரு ஐ.பி.எல் சீசன்களில் பாதிதான் இந்தியாவில் நடந்தது. அதுவும் மைதானத்தில் இரசிகர்களுக்கு அனுமதி தரப்படாமலே நடந்தது. கொரோனாவால் உலகம் எங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்க, இந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனாவை தாண்டி ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் இரசிகர்களின் முன்னிலையில் வெற்றிக்கரமாக நடத்தி முடித்திருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனோ பரவலால் ஐ.பி.எல் மெகா ஏலம் நடத்தப்படாமல் ஒத்திப்போடப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் மெகா ஏலத்தோடே ஆரம்பித்தது. அதுமட்டும் இல்லாமல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என்ற இரு புதிய அணிகளும் பங்கேற்றன. புதிய கேப்டன்கள், புதிய அணி, அணிகளில் புதிய வீரர்கள் என இந்த ஐ.பி.எல் தொடர் இரசிகர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

இதற்கு ஏற்றார்போலவே இந்த வருட ஐ.பி.எல் சீசனும் அமைந்தது. சென்னை, மும்பை ஆகிய சாம்பியன் அணிகள் ப்ளே-ஆப்ஸ் தொடருக்குள் வராமல் ஒருசேர முதல் முறையாக வெளியேறின. புதிய அணிகளான லக்னோ, குஜராத் இரண்டும் ப்ளே-ஆப்ஸ் சுற்றை எட்டின. இதில் இறுதிபோட்டியில் குஜராத் ராஜஸ்தான் அணிகள் மோத குஜராத் அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

இந்த ஐ.பி.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்களில் ஜோஸ் பட்லர், குயின்டன் டிகாக், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், ரசீத்கான் ஆகியோரும், இந்திய நட்சத்திர வீரர்களில் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான், மொகம்மத் ஷமி ஆகியோரும், இளம் இந்திய வீரர்களில் திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், மோசின் கான் ஆகியோரும் சிறப்பாகச் செயல்பட்டனர். சில வருடங்களுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்க, உமேஷ் யாதவ் ஆகியோரும் நல்ல பார்மில் திரும்பி வந்தனர்!

இந்திய உள்நாட்டு போட்டிகளின் சச்சின் ஆகிய பிரபல வீரர் வாசிம் ஜாபர் இந்த ஆண்டிற்கான தனது ஐ.பி.எல் அணியை வெளியிட்டு இருக்கிறார். அவர் இதுபற்றிக் கூறும் பொழுது “கேப்டன்சியில் ஹர்திக் பாண்ட்யா என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டார். ஆச்சரியமே இல்லை அவர்தான் என் அணியின் கேப்டன். அதேபோல் குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஆசிஷ் நெக்ராவே எனது அணியின் பயிற்சியாளர்” என்றார்.

வாசிம் ஜாபர் அவர்களின் இந்த ஆண்டின் ஐ.பி.ல் அணி

ஜோஸ் பட்லர் – கே.எல்.ராகுல்
சஞ்சு சாம்சன் – ஹர்திக் பாண்ட்யா (கே)
லியாம் லிவிங்ஸ்டன்- டேவிட் மில்லர்
தினேஷ் கார்த்திக் (வி.கீ) – ஹர்சல் படேல்
மொகம்மத் சமி – வனிந்து ஹசரங்கா
யுஸ்வேந்திர சஹால்

இவரது அணியில் வனிந்து ஹசரங்கா இடம் பெற்றிருக்க, குஜராத் அணிக்காக 16 ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை 6.60 எகானமியில் வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் பினிசிங்கில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட ஆப்கனின் சுழற்பந்து வீச்சாளர் ரசீத்கான் இல்லாதது ஆச்சரியமாகவே இருக்கிறது!