பும்ராவை கேப்டனாக்கியது தவறு ; 95 டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீனியர் பாவம் இல்லையா ? – வசீம் ஜாபர் கோபம்

0
858
Wasim Jaffer and Jasprit Bumrah

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் 36வது கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கபில்தேவ்க்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

தமக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு என் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் என்று பும்ரா கூறியுள்ளார்.தோனி,கோலி,ரோகித்திடம் நிறைய கற்றுள்ளேன். அது நிச்சயம் கை கொடுக்கும் என்று பும்ரா கூறியுள்ளார்.
இந்த நிலையில் முன்னால் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா 95 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். புஜாரா ரஞ்சிப் போட்டியில் கூட கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் எவ்வித கேப்டன் அனுபவம் இல்லாத பும்ராவை தொடரை தீர்மானிக்கக் கூடிய முக்கிய போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது சரியான முடிவாக தோன்றவில்லை என்று வசீம் ஜாபர் கூறியுள்ளார்.

துணை கேப்டனாக இருந்தார் என்பதற்காக பும்ராவை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது தவறு என்று கூறியுள்ளார். பும்ரா கிரிக்கெட் அறிவு நிறைந்த நபராக இருக்கலாம். எப்படி ஹர்திக் பாண்டியா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தாரோ அதேபோல் பும்ரா செயல்படுவார் என்று நம்புவதாக வசீம் ஜாபர் கூறியுள்ளார்.