இந்த இளம் வீரரால் இந்த இளம் வீரரின் இடத்திற்கு ஆபத்து! – வாசிம் ஜாபர் புதிய கருத்து!

0
183
Jaffer

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. இதை அடுத்து அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு எல்லா அணி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன!

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு ஏற்றவாறு எல்லா அணிகளும் அதிகப்படியான ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது பங்களாதேஷில் ஒருநாள் தொடரை இழந்து உள்ள இந்திய அணி அடுத்து இந்தியாவில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது!

இந்திய அணியில் தற்போது துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரர் ஷிகர் தவான் இருவரும் உள்ளனர். இதற்கடுத்து மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக, பங்களாதேசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக சுப்மன் பகில் இருந்து வந்தார்.

ஆனால் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இசான் கிசான் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்திய பின்னர், ஒரு நாள் போட்டி இந்திய அணிக்கான மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் யார் என்பதில் பெரிய போட்டியும் குழப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ” இஷான் கிசான் வெளிப்படையாக தற்பொழுது சுப்மன் கில்லை விட மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். இதற்கு முன்பு இந்த இடத்தில் கில் இருந்தார். சில நேரங்களில் இவர் ஏன் அணியில் இல்லை என்று நீங்கள் கருத கூடும் அந்த அளவிற்கு அவர் சிறப்பாக செய்து உள்ளார் ” என்று கூறியுள்ளார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கில் நியூசிலாந்திலும் அவருக்கு கிடைத்த மற்ற வாய்ப்புகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். சமீப காலத்தில் ஒரு சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்ததை நாம் பார்த்து வந்துள்ளோம். இது இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமைக்கு தள்ளப் போகிறது. தற்பொழுது இந்திய அணியில் மூன்றாவது மற்றும் நான்காவது துவக்க ஆட்டக்காரர்கள் யார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. தவான் அனுபவ வீரராக இருப்பதால் அவர் கொஞ்சம் மோசமாக செயல்பட்டாலும், அவரது திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக அவரை தொடரவே விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் மூன்றாவது மற்றும் நான்காவது துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடம் பற்றிய குழப்பம் இருக்கவே செய்கிறது ” என்று கூறியுள்ளார்!