இந்தியா இதை கவனிக்கலனா நிச்சயம் அடிவாங்கும்; இவர்தான் பிரச்சனை – வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

0
164
ICT

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் 22ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு, ஒரு சரியான ஃபாஸ்ட் பௌலிங் யூனிட்டை கட்டமைக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திணறி வருகிறது!

ஜஸ்பிரித் பும்ரா காயம் அடைய, அவருடைய இடத்தை நிரப்ப இருந்த முகமது சமி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் புவனேஷ்வர் குமாருக்கு மாற்று வீரராக கருதப்பட்ட தீபக் சஹர் காலில் ஏற்பட்ட காயத்தால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் காயமடைந்து உலகக்கோப்பை அணியில் இருந்து வெளியேறினால், அவருக்கு மாற்றாக இருக்கும் ரிசர்வு வீரரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுகிறார். இன்னொரு வீரரோ காலில் காயம் அடைந்து உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேறுகிறார்.

இப்படி சமாளிக்க முடியாத தொடர் பிரச்சனைகளால் இந்திய அணி நிர்வாகம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கட்டமைக்க இந்த நாள் வரை தடுமாறி வருகிறது.

வியாழக்கிழமை பும்ரா இடத்தில் முகமது சமியும், முகமது சமி இடத்தில் முகமது சிராஜ் மற்றும் தீபக் சஹர் இடத்தில் ஷர்துல் தாகூர் ஆகியோர் இந்திய அணியில் இணைய ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுவும் இன்னும் உறுதியாகவில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் இந்த பிரச்சனை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தனது கவலை கலந்த எச்சரிக்கையை தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது ” இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இருக்கிறார். புதிய பந்தில் நன்றாக வீசுவார். ஆனால் சூழல் ஸ்விங் ஆக ஒத்துழைக்கவில்லை என்றால், அவரது குறைந்த வேகத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வார். யார்க்கர் வைத்திருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலியாவில் நிச்சயம் வேகம் வேண்டும் ” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசியவர் ” இந்தியா ஒரு நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் இன்னும் பும்ராவுக்கு மாற்று வீரரை முடிவு செய்யவில்லை. பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கிளிக் ஆனால், அவர்களின் சிறந்த தொடக்க வீரர்களையும், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களையும் வைத்து மிகச் சிறப்பாக செயல்பட முடியும். அவர்கள் மிடில் ஆர்டரை கவனிக்க வேண்டும் ” என்று கூறிஉள்ளார்!