புதிய ஃபேப் 4 வீரர்கள் இவர்கள்தான் – ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சனை நீக்கி புதிய 2 வீரர்களை இணைத்துள்ள வாசிம் அக்ரம்

0
534
Wasim Akram about Fab 4

நடப்பு கிரிக்கெட் விளையாட்டில் ஃபேபுலஸ் ஃபோர் ( அற்புதமாக விளையாடக்கூடிய 4 வீரர்கள் ) கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் நீண்ட நாட்களாக இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் இருப்பது வழக்கமான விஷயம். பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இவர்கள்தான் சிறந்த நன்கு வீரர்கள் என்றும் கூறுவார்கள்.

அவர்கள் தரும் பாராட்டுக்கு உரிய வகையில் இவர்களும் தங்களது அணிக்காக மிக சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை தேடித் தருவார்கள். குறிப்பாக தனியாக நின்று கடைசி வரை தங்கள் அணியின் வெற்றிக்காக போராடும் திறமை படைத்தவர்கள். ஆனால் இந்த நால்வரில் இரண்டு வீரர்களை நீக்கி, அந்த இடத்தில் புதிய இரண்டு வீரர்களை பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் இணைத்துள்ளார்.

வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ள புதிய ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னரை ஃபேபுலஸ் ஃபோர் பட்டியலில் இணைத்து விராட் கோலி, டேவிட் வார்னர், ஜோ ரூட் மற்றும் பாபர் அசாம் ஆகியோர்தான் புதிய ஃபேபுலஸ் ஃபோர் வீரர்கள் என்று வாசிம் அக்ரம் சமீபத்தில் கூறியுள்ளார். அவர் கூறிய இந்த பெயர் பட்டியலின் அடிப்படையில், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் வாசிம் அக்ரம் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார்.

மேலும் பேசிய அவர் பாபர் அசாமின் தொழில் நெறிமுறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னேரமும் கவனமாக இருக்க கூடிய வீரர் ஆவார். எந்த ஒரு கட்டத்திலும் திருப்தி அடையாமல் வெற்றிக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அவர். இவை தான் ஒரு சிறந்த கேப்டனுக்கும் அடையாளம். இந்த அத்தனை அம்சமும் அவரிடம் இருக்கிறது. இவ்வாறு பாபர் அசாமை வாசிம் அக்ரம் வெகுவாக பாராட்டியுள்ளார்.