வீடியோ: 360 டிகிரி பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தர்.. கடைசி சில ஓவர்கள் சிறப்பான சம்பவம்!

0
4199

3 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து கடைசி நேரத்தில் சிறப்பான கேமியோ கொடுத்து அசத்தினார் வாஷிங்டன் சுந்தர்.

நியூசிலாந்து-இந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணிக்காக களம்கண்ட துவக்க ஜோடி சுப்மன் கில்(50) மற்றும் தவான்(72) இருவரும் அரைசதம் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக்கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேறினர்.

மிடில் ஓவர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு முனையில் நிலைத்து ஆட, பின்னர் உள்ளே வந்த ரிஷப் பண்ட்(15) மற்றும் சூரியகுமார் யாதவ்(4) இருவரும் லாக்கி பெர்குஷனிடம் ஒரே ஓவரில் அவுட் ஆகினர்.

ஷ்ரேயாஸ் உடன் சிறிது நேரம் பாட்னர்ஷிப் அமைத்த சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

6வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் வந்த வேகத்திலேயே வெளுத்து வாங்கினார். 47வது ஓவரில் இருந்து ஒவ்வொரு ஓவருக்கும் தவறாமல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடித்தார்.

இவர் மூன்று சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகள் உட்பட 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 50 வது ஓவரில் 300 ரன்களை எட்டியது. 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்த இந்திய அணி 306 ரன்கள் எடுத்தது.

போட்டியின் 49வது ஓவரை மாட் ஹென்றி வீசினார். அதில் 4, 4, 6 அடித்த வாஷிங்டன் சுந்தர். மைதானத்தின் பல பகுதிகளில் அடுத்தார். 360 டிகிரியில் இவர் ஆடியது பலரையும் கவர்ந்தது.