என் வாழ்க்கையில் அந்த தவறை இனி செய்ய மாட்டேன் – வாசிங்டன் சுந்தர் கருத்து

0
164

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அளவில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். தனது 17வது வயதில் இந்திய அணியின் அடி எடுத்து வைத்த வாசிங்டன் சுந்தர் டெஸ்ட், டி20 போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பேட்டி கலக்கினார். இதனால் அவர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

எனினும் அதன் பிறகு தொடர்ந்து காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். குறிப்பாக ஒரு ஆண்டு இடைவெளியில் நான்கு முறை வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். முதலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காயமடைந்த வாஷிங்டன் சுந்தர் உள்ளூர் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். அதன் பிறகு டிசம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்கா தொடரில் களம் இறங்க முடியாமல் போனது.

இதன் பின்னர் நடப்பாண்டில் பிப்ரவரி மார்ச் மாதத்தில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் எதிராக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது .இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஜிம்பாவை தொடரில் சேர்க்கப்பட்டார். அப்போதும் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் நான்காவது முறையாக இந்திய அணிக்கு களமிறங்கும் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் வீணடித்தார்.தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பாண்டில் வாஷிங்டன் சுந்தர் கவுண்டிங் கிரிக்கெட்டில் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றார்.

- Advertisement -

இது குறித்து பேசிய வாசிங்டன் சுந்தர் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது உடல் தகுதியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்துள்ளேன். 20 கிரிக்கெட்டில் விளையாடியதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. நியூசிலாந்து தொடரில் அந்த அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும் என நம்புகிறேன். நியூசிலாந்து எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று. ஒரு வாரத்திற்கு முன்பே வந்ததால் இங்கு உள்ள சூழலை ஏற்ப எங்களை மாற்றிக் கொண்டோம். ஓய்வு நேரத்தில் உணவு விடுதிகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தோம் என்றும் அவர் கூறினார்.

பயிற்சி என்பது கால்பந்தாட்டம் விளையாடினோம் அப்போது என் காலில் காயம் ஏற்பட்டது அதனால் நான் பல்வேறு போட்டிகளில் விளையாட முடியாமல் போனது இதனால் இனி என் வாழ்நாளில் கால்பந்து போட்டியே விளையாட மாட்டேன் காயம் ஏற்படாமல் இருக்க என்ன வழி என்பது குறித்து பயிற்சி செய்திருக்கிறேன் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடம்பெற ஏழாவது இடத்தில் தீபக் ஹூடா மற்றும் வாசிங்டன் சுந்தர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.