43/7.. அமெரிக்காவின் ஆர்சிபியாக மாறிய மும்பை இந்தியன்ஸ்.. ஹெட் அதிரடி.. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி வெற்றி

0
288
MLC

தற்போது அமெரிக்காவில் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் மற்றும் வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் நடைபெற்றது. இதில் நியூயார்க் ஃப்ரீடம் அணி படுதோல்வி அடைந்திருக்கிறது.

நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டு டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். வாஷிங்டன் பிரீடம் அணி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அவர் பத்து பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்திருந்தபொழுது இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து அந்த அணியின் மற்றும் ஒரு அதிரடி துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் மிகச்சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய அமெரிக்கா வீரர் ஆண்ட்ரீஸ் கோஸ் 48 பந்துகளில் 59, ரச்சின் ரவீந்தரா அதிரடியாக 14 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள்.

20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் பிரீடம் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. நியூயார்க் மும்பை இந்தியன் அணியின் தரப்பில் கேப்டன் கீரன் பொல்லார்டு மற்றும் ரஷித் கான் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இது தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிபால்ட் பிரிவியஸ், நிக்கோலஸ் பூரன், கேப்டன் கீரன் பொல்லார்டு என நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஏமாற்றினார்கள். ஏழாவது இடத்தில் வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் 14பந்தில் 25 ரன்கள், டிரெண்ட் போல்டு 13 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணியின் 9 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். 43 ரன்களுக்கு ஏழு விக்கெட்டை இழந்து தடுமாறி பின்பு 88 ரன்கள் எடுத்தார்கள். இல்லையென்றால் ஆர்சிபி 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மோசமான சாதனையை முறியடித்து இருப்பார்கள்.

இதையும் படிங்க : இந்திய பசங்க 2 பேர்.. 1 வெளிநாட்டு பையன்.. இவங்க 3 பேர்தான் பியூச்சர் சூப்பர் ஸ்டார் – ராபின் உத்தப்பா கணிப்பு

நியூயார்க் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக 13.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு மார்க்கோ யான்சன், லாக்கி பெர்குஷன் கிளன் மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். ஜஸ்தீப் சிங் மூன்று விக்கெட் கைப்பற்றினார். வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -