கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா வார்னர்?; உலகக்கோப்பை தோல்வியின் எதிரொலியால் அதிரடி முடிவு!

0
402

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக வாரினர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் அணியாக களமிறங்கிய ஆஸ்திரேலியா நிச்சயம் கோப்பையை வெல்லும் அளவிற்கு பலம் பொருந்தி அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது சீனியர் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பதுதான். இதன் காரணமாக டேவிட் வார்னர், மேத்யூ வேட் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

உலக கோப்பை வெளியேற்றத்திற்கு பிறகு தனது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் அடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பை பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் டேவிட் வார்னர். அவர் கூறுகையில்,

“2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் எங்களது முக்கிய திட்டத்தில் ஒன்றாக இருக்கிறது. அதில் எப்படி செயல்பட வேண்டும், எவ்வாறு இளம்வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் கொண்டு அணியை உருவாக்க வேண்டும் என்று நிர்வாகத்துடன் சேர்ந்து இப்போது இருந்தே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

- Advertisement -

லிமிடெட் ஓவரு போட்டிகளில் முழு கவனம் செலுத்துவதற்கு திட்டமிட்டு வருகிறேன். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பைகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஆகையால் அடுத்த 6-12 மாதங்களுக்குள் எனது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவுகளை எடுப்பேன். அத்தொடர் முடிவுற்றவுடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை மறக்கவே முடியாது. என்றார்.

தற்போது 36 வயதாகும் டேவிட் வார்னர் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் உலககோப்பைக்குள் 38 வயதாகிடுவார். டெஸ்ட் போட்டிகளில் அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவில்லை. ஆகையால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு லிமிடெட் ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த iத்தகைய முடிவை அவர் எடுக்கலாம்.