வார்னர் இரட்டை சதம்.. 100வது டெஸ்டில் எவருமே செய்திராத புதிய உலகசாதனை!

0
532

நூறாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்தது தென்னாபிரிக்கா.

- Advertisement -

189 ரன்களுக்கு தென்னபிரிக்காவை ஆல்அவுட் செய்தது ஆஸ்திரேலியா. அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

துவக்க வீரர் கவாஜா 1 ரன்னிலும், லபுச்சானே 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, மூத்த வீரர்கள் வார்னர் – ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். வார்னருக்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும்.

தனது 100வது டெஸ்டில் சதமடித்து அசத்தி, புதிய சாதனை படைத்தார். இவருடன் சேர்ந்து பேட்டிங் செய்து வந்த ஸ்மித் அரைசதம் கடந்தார். இவர் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

- Advertisement -

100வது டெஸ்டில் 200 ரன்கள் சாதனை:

மறுமுனையில் நிற்காமல் ஆடிவந்த வார்னர் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 3வது இரட்டை சதம் இதுவாகும்.

100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது வீரர் ஆவார். இதற்கு முன்பு ஜோ ரூட் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதமடித்துள்ளார்.

3வது விக்கெட்டுக்கு வார்னர்-ஸ்மித் ஜோடி 239 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் ஆட்டமிழந்த பின்பு டிராவிஸ் ஹெட் உள்ளே வந்து விளையாடிவருகிறார். ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்து 156 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.