இந்த கிரவுண்டுல டாஸ் வின் பண்ணா பேட்டிங் பண்ணுவாங்க, ஆனா நான் ஏன் பவுலிங் எடுத்தேன்? – ரோகித் சர்மா விளக்கம்!

0
1984

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று எதற்காக பவுலிங் தேர்வு செய்தேன் என ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராய்ப்பூர் மைதானம் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். ஆனால் ரோகித் சர்மா எதற்காக பந்துவீச்சை தேர்வு செய்தார் என்கிற சந்தேகம் நிலவியது. இதற்கான விளக்கத்தை ரோகித் சர்மாவே கொடுத்திருக்கிறார். பவுலிங் தேர்வு செய்த பிறகு பேசிய ரோகித் சர்மா கூறுகையில்,

“டாஸ் வென்றால் என்ன தேர்வு செய்ய வேண்டும் என்று அணியுடன் நீண்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்த பிறகு, என்ன முடிவு செய்தோம் என்பதை மறந்து விட்டேன். ஒவ்வொரு போட்டிகளிலும் கடினமான சூழலில் எங்களுக்கு நாங்களே சேலஞ்ச் செய்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன். அதற்காக இந்த மைதானத்தில் முதலில் பந்துவீச முடிவு செய்கிறேன். இது எங்களுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். அதேபோல் இந்த மைதானம் இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய நன்றாகவும் இருக்கும் பந்து வீச்சிற்கும் நன்றாக எடுபடும். இரண்டும் கலந்தவையாக இருப்பதால், இந்த கடினமான சூழலை சேலஞ்சாக எடுத்துக் கொள்கிறோம்.” என்றார்.

- Advertisement -

மேலும், “இந்த போட்டியில் எந்தவித மாற்றமும் இன்றி முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணி இம்முறையும் களமிறங்குகிறது.” என்று கூறினார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் மற்றும் முகமது சமி