ஒரு காலத்தில் வீட்டில் இருந்து பார்த்தேன் இப்போது அவர்களுடனே ஆடப் போகிறேன் – ஆர்சிபி வீரர் நெகழ்ச்சி

0
1200
Wanindu Hasaranga RCB

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 31 ஆட்டங்கள் மீதம் இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தள்ளிப் போனது. மீதி ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹலோ ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தற்போது முனைப்புடன் காணப்படுகிறது.

இப்படியிருக்க பெங்களூரு அணி இலங்கை அணி வீரரான வனிந்து ஹசரங்காவை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக இந்தத் தொடரில் ஹசரங்கா விளையாடுவார் என்று அந்த அணி தெரிவித்து உள்ளது. பல அணிகள் ஹசரங்காவை வாங்க போட்டி போட்டுக் கொண்டு இருந்த நிலையில் பெங்களூரு அணி தங்கள் அணிக்கு ஹசரங்காவை ஆட ஒப்பந்தம் செய்து முடித்துள்ளது.

- Advertisement -

இந்திய அணி ரசிகர்களுக்கு ஹசரங்காவைவை மிக நன்றாக தெரியும். கடந்த ஜூலை மாதம் நடந்த டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார். அதே தொடரின் ஒரு ஆட்டத்தில் 9 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார் ஹசரங்கா.

பெங்களூர் ஆணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட செய்தியை அறிந்த பின்பு ஹசரங்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிகழ்ச்சியான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெங்களூர் அணியின் ஜெர்சியை அணிந்தபடி உள்ளார் ஹசரங்கா. மேலும் ஒரு காலத்தில் நான் வீட்டில் அமர்ந்து இருந்து பெங்களூரு அணி ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அவர்களுக்காகவே ஆடப்போகிறேன் என்று மிகவும் உணர்ச்சி வசமாக பதிவிட்டிருந்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் டான் கிறிஸ்டியன் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படாததால் அவரது இடத்தை ஹசரங்கா நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமீரக மைதானங்கள் சூழலுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும் சஹால் மற்றும் ஹசரங்கா கூட்டணியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஹசரங்கா வை மட்டும் பெங்களூர் அணி இன்று ஒப்பந்தம் செய்யவில்லை சிங்கப்பூர் வீரரான டிம் டேவிட் மற்றும் துஷ்மந்த் சமீராவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். புள்ளிப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி ப்ளேயாஃப் வாய்ப்பை உறுதி செய்ய ஹசரங்கா மிகவும் உதவி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.