முடிவடைந்தது விவோ ஐ.பி.எல் ; புதிய டைட்டில் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம் தான் – பிசிசிஐ அறிவிப்பு

0
262
Vivo IPL

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக ஒவ்வொரு ஆண்டும் நடந்துகொண்டு வருகிறது. பிசிசிஐ ஆரம்பிக்கப்பட்ட இந்த டி20 தொடர் உலக அளவில் பின்னர் பிரபலமடைந்து, பிற நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் தங்களுடைய நாட்டில் தனி டி20 தொடர் ஆரம்பித்த கதைகள் உண்டு.

எவ்வளவு டி20 தொடர் வந்தாலும் இன்றும், ஐபிஎல் தொடரை ஈடு செய்யும் அளவுக்கு மற்ற டி20 தொடர்கள் பிரபலம் அடையவில்லை என்பதே உண்மை. ஐபிஎல் தொடரின் வியாபாரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே போகிறது. ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் காண்ட்ராக்ட் தொகையின் வரலாறே அதை உறுதி செய்யும்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஸ்பொன்சர்ஷிப் கான்ட்ராக்ட் வரலாறு :

2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை டிஎல்எஃப் நிறுவனம் ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

பின்னர் 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பெப்சி நிறுவனம் 79.2 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு விவோ மொபைல் நிறுவனம் நடத்தும் ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை 100 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

- Advertisement -

அதன் பின்னர் 2018 முதல் 2019ஆம் ஆண்டு வரை மீண்டும் விவோ மொபைல் நிறுவனம் 439.8 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை கைப்பற்றியது.

2020 ஆம் ஆண்டு ட்ரீம் லெவன் நிறுவனம் 222 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை கைப்பற்றியது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை மீண்டும் விவோ மொபைல் நிறுவனம் 440 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. மீண்டும் அந்த நிறுவனமே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை தக்க வைத்துக்கொள்ளும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த நிறுவனம் தற்பொழுது பிசிசிஐ உடனான காண்ட்ராக்டில் இருந்து பின் வாங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் உரிமையை கைப்பற்றிய டாடா நிறுவனம்

விவோ ஸ்பான்சர்ஷிப் உரிமை காண்ட்ராக்டில் இருந்து பின்வாங்கியதை தொடர்ந்து, பிசிசிஐ ஆளுமை குழு மத்தியில் ஒரு பிரத்தியேக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அனைவரும் ஒருமனதாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் பொறுமையை டாடா நிறுவனத்திற்கு தர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை டாடா நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.