தினேஷ் கார்த்திக்கை பினிஸராய் அணியில் எடுத்தது வினோதமானது – இந்திய முன்னாள் வீரர்!

0
264
Dinesh karthick

தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபிக்க 18 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான வீரரும் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் காலத்தில் இவரால் அவரைத் தாண்டி மேல் எழுந்து வர முடியவில்லை. ஆனாலும் மனம் தளராத இவர் இறுதிவரை போராடி தற்போது தனது 37வது வயதில் தன்னை நிரூபித்து இந்தியா டி20 அணியில் இடம்பிடித்து, இப்பொழுது ஆசிய கோப்பை அணியிலும் இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும், பேட்டிங்கில் பினிஷெர் ஆகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் 330 ரன்களை அடித்தார். இதில் குறிப்பிடத்தக்கது அவரது ஸ்ட்ரைக் ரேட் தான். ஸ்ட்ரைக் ரேட் 183.33 என்று மிகப் பெரியது. இவர் கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக டெத் ஓவர்களில் 13 ஆட்டங்களில் நூத்தி இருபத்தி ஒரு பந்துகளைச் சந்தித்து 251 ரன்களை நொறுக்கி இருக்கிறார். இதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 207.4. சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பவுண்டரி அடித்து இருந்தார்.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு சிறப்பான முறையில் பினிஷர் ரோலில் செயல்பட்டதால் இந்திய டி20 அணிக்கு தேர்வான இவர், இந்திய அணிக்காக டெத் ஓவர்களில் 104 பந்துகளைச் சந்தித்து 164 ரன்களை அடித்திருக்கிறார். இதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 157.4. சராசரியாக நான்கு பந்துகளுக்கு ஒருமுறை பவுண்டரி அடித்து இருக்கிறார்.

தற்போது தினேஷ் கார்த்திக்கை பினிஷிங் ரோலில் இந்திய அணியில் எடுத்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான விவேக் ரஸ்தான் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இவர் 1989-90 காலகட்டங்களில் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இந்திய அணிகள் தினேஷ் கார்த்திக்கை பினிஷிங் ரோலில் எடுத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இவர் அதில் ” தினேஷ் கார்த்திக்கை பினிஷிங் ரோலில் எடுத்து அந்த இடத்தை அத்தோடு அதில் எனக்கு விருப்பமில்லை. அது வினோதமான ஒன்றாக தெரிகிறது. விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா இவர்கள் அந்த வேலையைச் செய்ய மாட்டார்களா நீங்களே கூறுங்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் இதை விளக்கிப் பேசிய இவர் ” பினிஸர் ரோலில் ஒரு பேட்ஸ்மென் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது என்பது மிகவும் கடினமான செயல். நீங்கள் அந்த இடத்தில் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு அணிக்கு நல்ல விதமான தாக்கங்களை தந்தே ஆக வேண்டும். ஆனால் பந்து வீச்சாளர்கள் மிகவும் புத்திசாலிகள். எங்களை அவர்கள் பந்தை காற்றில் அடிக்க தூண்டிக் கொண்டே இருப்பார்கள். உங்களால் அவர்களை எதிர்த்து ஒவ்வொரு முறையும் வெற்றி பெற முடியாது. இது பினிஷிங் ரோல் என்பதை இன்னும் கடினமாக்குகிறது. அவரை அந்த இடத்திற்காக என்று எடுப்பது எனக்கு உடன்பாடில்லை” என்று கூறியிருக்கிறார்!

தினேஷ் கார்த்திக்கிற்கு எந்த அளவிற்கு வெளியில் இருந்து ஆதரவு வருகிறதோ அதே அளவிற்கு தற்காலத்தில் எதிர்ப்புகளும் வருகிறது. அவர் தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவரை அப்படித்தான் கிரிக்கெட் உலகமும் வைத்திருக்கிறது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அவருக்கு ஆதரவாக இருப்பது நல்ல விஷயம்!