ஜாகிர் கான் & ஆசிஷ் நெஹ்ரா போல இவருக்கும் அந்த திறமை இருக்கிறது – இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரை பாராட்டியுள்ள சேவாக்

0
159

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் மற்றும் ஐதராபாத் அணியில் விளையாடிய உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடிதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்றன டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வருகிற ஜூன் மாதம் இவர்கள் இருவரும் முதல் முறையாக சர்வதேச அளவிலான டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக விளையாட இருக்கின்றனர். இவர்கள் இருவரில் அர்ஷ்தீப் சிங் குறித்து சேவாக் வெகுவாக தற்போது பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அதுபோல பந்து வீசுவது மிகவும் கடினம்

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றியுள்ளார். விக்கெட்டுக்கள் அவர் குறைவாக கைப்பற்றி இருந்தாலும் அவருடைய எக்கானமி 7.91 ஆக மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி அவர் புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசுகிறார் அதேசமயம் ஸ்லாக் ஓவர் அதாவது டெத் ஓவர்களிளும் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

என்னுடைய காலகட்டத்தில் இது போல ஜாகிர் கான் மற்றும் ஆசிஷ் நெஹரா மட்டுமே புதிய பந்திலும் சரி டெத் ஓவர்களிலும் சரி சிறப்பாக பந்து வீசுவார்கள். தற்பொழுது இந்திய அணியில் அதுபோன்று ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் பேசக்கூடிய திறமை பெற்றவர்கள். அவர்களைப் போலவே அர்ஷ்தீப் சிங்கும் மிக சிறப்பாக இதை கையாள்கிறார்.

- Advertisement -

இதுபோல புதிய பந்திலும் அதேசமயம் போட்டியின் டெத் ஓவர்களிலும் சரிசமமாக சிறப்பாக பந்து வீசுவது மிகவும் சவாலான ஒன்று. அதை அலட்சியமாக இவர் கையாளும் விதம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது என்றும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் 12 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார் அதன் காரணமாகவே பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடருக்கு அவரை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.