இன்னும் 2-3 ஆண்டுகளில் இவர் தான் சென்னை அணியை வழிநடத்துவார் ; தோனியின் குணங்களில் இந்த ஒன்றைத் தவிர அனைத்தும் இவரிடம் உள்ளது – சேவாக் நம்பிக்கை

0
1487
Virender Sehwag and MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்ராஜ் கெய்க்வாட் ஆரம்பித்த விதம் சரியாக இல்லை என்றாலும் தற்போது அந்த அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார். 2020ஆம் ஆண்டு 6 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று அரை சதங்களுடன் 204 ரன்கள் குவித்து அனைவரிடமும் தன் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தினார்.

பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு அதாவது கடந்த ஆண்டில் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இவர் விளங்கினார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பான துவக்கத்தை சென்னை அணிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டுகளில் சென்னை அணியில் ஃபேப் டு பிளேசிஸ் ஓபனிங் வீரராக எப்படி சிறப்பாக விளையாடினாரோ அதேபோல தற்பொழுது ருத்ராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவரைப் பற்றி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவாக் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

மகேந்திர சிங் தோனியின் குணாதிசயம் இவரிடம் இருக்கிறது

இன்னும் மூன்று முதல் நான்கு சீசன்களில் தொடர்ச்சியாக இதே போல இவர் விளையாடும் பட்சத்தில், சென்னை அணிக்கு இவர் கேப்டனாக அனைத்து வாய்ப்பும் இருக்கிறது. மகேந்திர சிங் தோனிக்கு பின்னர் சென்னை அணிக்கு நீண்டகால கேப்டனாக வரக்கூடிய அத்தனை அம்சமும் இவரிடம் இருக்கின்றது.

அதுமட்டுமின்றி மகேந்திர சிங் தோனியின் குணாதிசியம் மற்றும் குணங்கள் அனைத்தும் இவரிடம் தென்படுகின்றன. மகேந்திரசிங் தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஒன்றே ஒன்று மட்டும் இவரிடம் இல்லை. லக் ஃபேக்டர் (அதிர்ஷ்டம்) மாத்திரம் இவரிடம் இல்லை மற்றபடி அனைத்து தகுதியும் இவருக்கு உண்டு என்று வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கு பின்னர் ரவீந்திர ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்று பின்னர் அதை மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம் கொடுக்க, தற்பொழுது மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை அணி கேப்டனாக வழிநடத்தி வருகிறார். விரேந்திர ஷேவாக் கூறியது போல இனி வரும் ஆண்டுகளில் சென்னை அணிக்கு புதிய கேப்டனை நியமிக்கும் பட்சத்தில், அந்த வாய்ப்பு ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.