சச்சின், டிராவிட், தோனி & யுவராஜ் சிங் பின்பற்றிய வழியை ஜடேஜா பின்பற்ற வேண்டும் – ஷேவாக் ஆலோசனை

0
97
Virender Sehwag advice for Jadeja

அடுத்தடுத்த தொடர் தோல்விகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவண்டு வருகிறது. கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது வரை தோல்வியே கிடைத்து வருகிறது.

அந்த அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து தோல்விகளை பெற்றுவரும் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜாவுக்கு முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் ஆலோசனை வழங்கியுள்ளார்.

- Advertisement -
உங்கள் மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ளுங்கள்

ஆரம்பத்தில் 4 போட்டிகளில் தோல்வி என்பது சற்று இக்கட்டான நிலை தான். ஆனால் இனி அவற்றைப் பற்றி பேசி ஒன்றும் மாறி விடப் போவதில்லை. சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா தன்னுடைய மொபைல் போனை இனி அவ்வளவாக பயன்படுத்தக் கூடாது.

மொபைல் போனை ஏரோபிளேன் மோடில் போட்டுக்கிட்டு அவர் இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஏதேனும் பதிவிட விரும்பினால், அப்பொழுது மட்டும் தொலைபேசியை ஏரோபிளேன் மோடிலிருந்து மாற்றி பதிவு செய்து கொள்ளட்டும். பின்னர் மீண்டும் மொபைலை ஏரோபிளேன் மோடில் போட்டு விட வேண்டும்.

தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் பத்திரிக்கைகளில் அவர் விமர்சனங்களை அவ்வளவாக புத்தியில் மற்றும் மனதில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. ரசிகர்கள் என நினைப்பார்கள் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்பது குறித்து சதா சிந்திக்க கூடாது. முன்னணி கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரும் அவர்கள் விளையாடிய காலத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்த பொழுது இவற்றை தான் பின்பற்றினார்கள்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா வீடியோ கேம் விளையாட வேண்டும். நடந்து முடிந்ததை எண்ணி துவண்டுவிடாமல் இனி நடக்கப் போவது குறித்து யோசித்து அதற்கான பயிற்சியை எடுக்க வேண்டும் என்றும் முதலில் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் அக்கறையுடன் தற்போது ஆலோசனை கூறியுள்ளார்.