ஒரு நாள் போட்டியில் மீண்டும் சதம் அடித்த விராட்!- மேலும் பல சாதனைகள் புரிந்த கிங்!

0
870

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஒரு நாள் போட்டி தொடர்களில் ஆடி வருகிறது. இந்த ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றி விட்ட நிலையில் சம்பிரதாயமாக மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அருமையாக துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அணை நிலவரம் 95 ஆக இருந்தபோது 42 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் இணைந்து இரண்டாவது விக்கெட் அருமையாக ஆடினார். சிறப்பாக ஆடிய கில் தனது இரண்டாவது சதத்தை இன்று பதிவு செய்தார்.

இந்தப் போட்டியில் விராட் கோலி மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறார் விராட் கோலி.

இன்றைய போட்டியில் தன்னுடைய 60 ரன்கள் கடந்ததன் மூலம் ஸ்ரீலங்கா அணியின் லெஜெண்ட் கிரிக்கெட்டர் மற்றும் முன்னாள் கேப்டனான மகிலா ஜெயவர்த்தன ரண்களைக் கடந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் விராட். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 46வது சதத்தை நிறைவு செய்தார் . இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்ததற்கான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி . இதுவரை இந்தியாவில் மட்டும் டெண்டுல்கர் 20% அடித்திருக்கிறார் . இன்று விராட் கோலி அடித்த இந்த சதத்தின் மூலம் அதனை முறியடித்து 21 வது சதத்தை அடித்து இருக்கிறார் விராட் கோலி .

மகிலா ஜெயவர்த்தனா 448 போட்டிகளில் 12,650 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த ரன்களை விராட் கோலி 268 போட்டிகளில் அவரது ரன்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார் கோலி. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் பிதாமகன் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் லெஜெண்ட் குமார் சங்ககாரா 14,234 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 13,704 ரன்கள் எடுத்துள்ளார். நான்காவது இடத்தில் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சன்த் ஜெயசூர்யா 13.430 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் விராட் கோலி 268 போட்டிகளிலேயே 12,660 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.