டி20 உலகக் கோப்பைக்கு பின் யார் இந்திய அணியின் கேப்டன் – கோஹ்லியா ரோஹித்தா ? பிசிசிஐ வெளியிட்ட புதிய செய்தி

0
429
Rohit Sharma Virat Kohli and Sourav Ganguly

இந்திய அணிக்காக மூன்று ஃபார்மட்டுகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. இவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான ஐசிசி தொடர்களில் கோப்பை வெல்ல இந்திய அணி தடுமாறி வருகிறது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இருந்தாலும் தொடர்ந்து இந்திய அணி பெரிய தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவதால் இந்திய அணி கேப்டன் விராத் கோலியை மாற்றப் போவதாக தகவல்கள் கசிந்தன.

நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல தவறும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து ரோஹித் சர்மாவிடம் தரப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்திய அணி உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இடம் விழுந்த உடனேயே விராட் கோலியின் தலைமை குறித்த கேள்விகள் எழுந்ததாக கூறப்பட்டது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விராட்கோலி இரண்டு ஸ்ப்பின்னர்களை பயன்படுத்தியதால் முக்கிய நிர்வாகிகள் பலரும் விராட் கோலி தலைமை மீது சற்று கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதையெல்லாம் மறுக்கும் வண்ணமாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தற்போது செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். விராத் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப் போவதாக வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் மீடியா தேவையற்ற விவாதங்களை கிளப்பிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தலைமை குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் எந்த ஒரு கூட்டத்தையும் கூறவில்லை என்றும் அதைப் பற்றி விவாதிக்க கூட இல்லை என்றும் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார் துமல்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த உடனேயே விராத் கோலியின் தலைமை குறித்து பலர் மோசமான கருத்துக்களை முன்வைத்ததாக கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளார் பிசிசிஐ பொருளாளர். காலை முதல் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோகித் கேப்டனா அல்லது கோலி கேப்டனாக என்று விவாதம் நடந்து வந்த நிலையில் அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அருண் துமல்.