விராட் கோலியை அணியை விட்டு நீக்குவீர்களா ? பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு ரோஹித் அதிரடி பதில்

0
42416
Rohit Sharma and Virat Kohli

இந்திய அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்து உள்ளது. இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்று ஒயிட்வாஷ் ஆகியிருந்தது. அப்போது தற்காலிக கேப்டனாக இருந்த ராகுலின் இடத்தில் நிரந்தர ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் தற்போது பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே 3 ஆட்டங்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இந்தியா.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு கிடந்த இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியின் மூலம் மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பான டாப் 3 வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுத்து விட்டாலும் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியது பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவருமே சிறப்பாக செயல்பட்டு இந்த தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த தொடரில் முக்கியமான பிரச்சனையாக ரசிகர்களால் கருதப்படுவது விராட் கோலியின் ஃபார்ம். மூன்று போட்டிகளிலும் ஒருமுறைகூட அரை சதம் அடித்த விராட் கோலி சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு ஆடி வருகிறார். பலரும் விராட் கோலியின் ஆட்டோ முறையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று கருத்துக்களை கூறிவரும் நிலையில் அப்படி எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்று கேப்டன் ரோகித் கூறியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய ரோகித், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எதுவும் கவலைப்பட தேவையில்லை என்றும் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் தான் அவர் இரண்டு அரை சதங்களை அடித்தார் என்றும் ரோஹித் கூறினார்.

இதேபோல கடந்த டி20 உலக கோப்பை தொடரில் கேப்டனாக இருந்தபோது ரோஹித்துக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க வேண்டும் என்ற கருத்துக்கு ரோகித் இத்தனை ஆண்டு காலம் அணிக்கு செய்ததை எல்லாம் அறிந்திருந்தும் இவ்வாறு பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று கோலி கூறினார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது என்று பலரும் கூறி வரும் நிலையில் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று நிரூபிப்பது போல இவர்கள் இருவரும் களத்தில் செயல்பட்டு வருவதை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.