3வது டி20ல் முன்னணி வீரர் இல்லை, மாற்று வீரர் அறிவிப்பு!

0
1989

மூன்றாவது 20 போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் செய்ய உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது தென்னாபிரிக்கா அணி. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டையும் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முதல் முறையாக கைப்பற்றியது.

இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடக்க உள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றி விட்டதால் மூன்றாவது டி20 போட்டியில் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரண்டாவது டி20 போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா, அப்போட்டிக்கு பின்னர் சூரியகுமார் யாதவுருக்கு முழுமையாக ஓய்வு கொடுத்து நேரடியாக உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வைக்க எண்ணி வருவதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் இருக்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலிக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுத்தால் இன்னும் நல்ல மனநிலையில் அவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார் என்கிற கூடுதல் தகவல்களும் வெளிவந்திருக்கிறது.

ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா விலகிவிட்டார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் மட்டும் மாற்று வீரராக முகமது சிராஜ் இடம் பெற்று இருக்கிறார். ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் யார் பும்ராவின் இடத்தை பிடிப்பார் என இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. அது பற்றிய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என்ற பிசிசிஐ தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.