4 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 50க்கு கீழே சென்றுள்ள விராட் கோலியின் டெஸ்ட் ஆவெரேஜ் – வருத்தத்தில் ரசிகர்கள்

0
88
Virat Kohli

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் நிதான ஆட்டம் ஆடும் இந்திய அணி

143 ரன்கள் முன் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தற்போது 46 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்து சற்றுமுன் ஆட்டமிழந்தார். தற்பொழுது இந்திய அணி இலங்கை அணியை விட 340 தங்கள் முன்னணியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

50க்கு கீழ் சென்ற விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ்

தற்பொழுது உள்ள இந்திய வீரர்கள் மத்தியில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் 50க்கு மேல் பேட்டிங் ஆவெரேஜ் வைத்திருக்கும் வீரர் விராட் கோலி தான்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் ஆவெரேஜ் ஒருமுறை 50க்கு கீழ் சென்றது. 2017 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 50க்கு கீழ் சென்றது. பின்னர் ஒரு சில போட்டிகளிலேயே தன்னுடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜை மீண்டும் 50க்கு மேல் உயர வைத்தார்.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 23 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் கோலி 13 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்சில் கோலி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவுடன் அவரது டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 50க்கு கீழ் (49.96%) குறைந்துள்ளது.

40 டெஸ்ட் போட்டிகள் கழித்து முதல் முறையாக அதாவது 1,683 நாட்கள் கழித்து மீண்டும் முதல் முறையாக விராட் கோலியின் டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 50க்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.