9வது எக்ஸாமில் விராட் கோலி போட்டோ… இணையதளத்தில் வைரலாகும் கேள்வித்தாள்!

0
1115

9ஆம் வகுப்பு தேர்வில் விராட் கோலியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த கேள்வித்தாள் இப்போது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் சமகாலத்தில் மூன்றுவித போட்டிகளிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி, கடந்த காலங்களில் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வந்த சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக பேசப்பட்டு வருகிறார்.

- Advertisement -

பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சதங்களை விளாசி அதிலும் சாதனை படைத்து வருகிறார். மேலும் தனது சிறப்பான கேப்டன் பொறுப்பிலும் பல தொடர்களை வெற்றி பெற்று கொடுத்து பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச போட்டிகளில் சதமடிக்க முடியாமல் திணறி வந்தார். கடந்த ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சதமடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பினார்.

பிறகு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இவற்றில் சதமடித்து வரிசையாக 5 சதங்கள் மற்றும் 8 அரைசதம் என ஆசியகோப்பைக்கு பிறகு கிட்டத்தட்ட 1600 ரன்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்து தனது சிறப்பான பார்மிற்கு திரும்பி இருக்கும் விராட் கோலி மீது இந்த வருடம் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை நடக்கிறது. அதில் விராட் கோலியின் பார்ம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இப்படி சர்வதேச போட்டியில் 2009ம் ஆண்டிலிருந்து மிக முக்கியமான வீரராகவும், ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு பல வருடங்களாக கேப்டன் பொறுப்பிலும் இருந்துவந்த விராட் கோலி பற்றி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தெரியாத ஆளே இருக்க முடியாது.

இப்படிப்பட்ட வீரரை பற்றி ஒன்பதாம் வகுப்பு தேர்வில் கேள்வி கேட்கப்பட்டது. இவரது புகைப்படத்தையும் (ஆசியகோப்பையில் சதமடித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ) அதில் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. அந்த ஒன்பதாம் வகுப்பு தேர்வின் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. துல்லியமாக இதில் என்ன மாதிரி என கேள்வி என்று தெரியவில்லை. ஆனாலும் விராட் கோலியின் புகைப்படம் அதில் இடம்பெற்று இருந்ததால் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.