“பாதியிலே விடைபெறுகிறோம் என நினைக்கும்போது…” – ரசிகர்களுக்கு விராட் கோலி உருக்கமான பதிவு!

0
2828

இந்திய அணி அரையிறுதி போட்டியோடு வெளியேறியதை தொடர்ந்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரை மட்டுமே நம்பி இருந்ததாக தெரிந்தது. தொடர் முழுவதும் கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பெரிதளவில் பங்களிப்பை கொடுக்கவில்லை.

அவர்கள் இருவரும் சிறந்த துவக்கமும் அமைத்து தரவில்லை என்பதால் பின்னடைவாக அமைந்தது. மேலும் பந்துவீச்சில் அர்சதிப் சிங் தவிர மற்றவர்கள் போதிய அளவில் விக்கெட் வீழ்த்தி தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதன் காரணங்களால் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது.

நிச்சயம் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்பட்டு வந்த நிலையில், இப்படி போட்டியிலேயே வெளியேறியதால் ரசிகர்கள் பெருத்த சோகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் உலக கோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியதற்கு விராட் கோலி சோகமாக பதிவிட்டதோடு இனிவரும் போட்டிகளில் இன்னும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் நம்பிக்கையாக தெரிவித்தார்.

- Advertisement -

அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஆஸ்திரேலியா கடற்கரையை விட்டு பாதியிலேயே வெளியேறுகிறோம். செய்ய வந்த காரியத்தை செய்ய முடியாமல் இப்படி பாதியிலேயே வெளியேறுவது மன வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் இந்த புள்ளியை துவக்கமாகக் கொண்டு இனி வரும் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளோம். ஒவ்வொரு மைதானத்திலும் இந்திய ரசிகர்கள் நிரம்பி வழிந்து எங்களுக்கு சப்போர்ட் செய்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகக்கோப்பை தொடர் எனக்கு நிறைய நினைவுகளை கொடுத்திருக்கிறது அதை எடுத்து செல்கிறேன். ஒரு அணியாக சேர்ந்து இன்னும் நன்றாக செயல்படுவோம்.” என்றார்