ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போது விராட் தனது அணியினருடன் என்ன பேசினார் தெரியுமா?

0
3504
Virat Kohli at lords Test

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது முதல் டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானதில் மழையின் குறுக்கீடு காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது.

இன்றைய நாள் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை டிரா செய்தாலே பெரிய விஷயம் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்த போது இந்த வெற்றியை இந்திய அணி இப்போது ருசித்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

Captain Virat Kohli

ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணியை இந்திய அணி வீரர்களை உரசி பார்த்தனர். மார்க் வுட் வீசிய பந்து உம்ராவின் ஹெல்மட்டை தாக்க ஆட்டம் சூடு பிடித்தது. இந்திய அணி விரைவாக ஆட்டமிழந்து விடும் என்று பலர் நினைக்க, ஷமி மற்றும் பும்ரா இணைந்து 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

வலுவான இலக்கை இந்திய அணி அமைத்த பிறகு பந்து வீச வந்தது இந்திய அணி. கடைசி இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பு தனது வீரர்களிடம், “இந்த இன்னிங்ஸ் 60 ஓவர்கள் முழுவதும் நம்மிடத்தில் இருக்கும் நெருப்பை எதிரணியினர் உணர வேண்டும்” என்று கூறினார். வீரர்களும் கேப்டனின் வார்த்தைகளைக் கேட்டு உத்வேகம் அடைந்து விட்டனர் போல. பும்ரா வீசிய முதல் ஓவரில் பர்ன்ஸ் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ஷமி சிஃப்லியை அவுட் ஆக்கினார். அந்த நெருப்பை இந்திய அணி வீரர்கள் இறுதி வரை விடவே இல்லை.

சீரிய இடைவெளியில் விக்கெட்டுகள் வந்து கொண்டே இருந்தன. பட்லர் மற்றும் ராபின்சன் இணைந்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறி இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். அடுத்து வந்த ஆண்டர்சனும் டக் அவுட் ஆக இந்திய அணி வெற்றி பெற்றது. கேப்டன் கோலி கூறியது போலவே சிராஜ் நான்கு விக்கெட்டுகளும் பும்ரா மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணியின் வெப்பத்தை இங்கிலாந்து வீரர்களுக்கு உணர்த்தினர்.