72 வது சர்வதேச சதம் அடித்து விராட் கோலி அசத்தல்!

0
1242
Viratkohli

ரோகித் சர்மா தலைமையில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பங்களாதேஷ அணி முதல் இரண்டு ஆட்டங்களை வென்று கைப்பற்றி விட்டது.

இதை அடுத்து இருக்கின்ற தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார்!

இதன்படி இந்திய அணிக்கு துவக்கம் தர சிகர் தவன் மற்றும் கிசான் கிசான் இருவரும் களமிறங்கினார்கள். இந்த தொடரில் சிகர் தவானின் மோசமான ஆட்டம் இன்றும் தொடர மூன்று ரன்கள் அவர் வெளியேறினார். இதை அடுத்து விராட் கோலி களம் கண்டார்.

இதற்குப் பிறகு இசான் கிசான் அதிரடியில் ஈடுபட்டு இந்திய அணியின் ரன் ரேட்டை மலை போல் உயர்த்தி இரட்டை சதம் அடித்து ஆட்டம் இழந்தார். அவருக்கு ஒரு முனையில் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை தந்த விராட் கோலி சீரான வேகத்தில் அரை சதத்தை எட்டினார்.

மேலும் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடிய விராட் கோலி மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44 ஆவது சதத்தை இன்று அடித்தார். ஒட்டுமொத்தமாக அவருக்கு சர்வதேச அளவில் இது 72 ஆவது சதமாகும். தற்போது விராட் கோலி 90 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

இந்தச் சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாம் இடத்திற்கு விராட் கோலி முன்னேறி உள்ளார். முதலிடத்தில் நூறு சதங்களுடன் சச்சின் தொடர்கிறார்!