பயிற்சியில் மேக்ஸ்வெல் ஆக மாறிய விராட் கோலி; வீடியோ லிங்க் இணைப்பு!

0
171
Virat kohli

விராட் கோலி கிரிக்கெட் புத்தகங்களில் இருக்கும் எல்லா வகையான அடி முறைகளையும் மிகச் சிறப்பாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன். தற்கால கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் அவருக்கு இணைவைத்து பேசக்கூடிய அளவில் பத்து வருடங்களுக்கு யாருமே இல்லாமல் தனி ஆட்சி செய்து வந்தார். தற்போதுதான் பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் ஆஸம் வந்திருக்கிறார். ஆனால் அவரும் கூட விராட்கோலி அவர் வயதில் செய்த சாதனைகளை நெருங்கவில்லை என்பதே உண்மை!

ஒரு காலத்தில் எதிரணிகள் எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தலும் விராட் கோலி சர்வசாதாரணமாக களத்தில் நின்று ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ரன்கள் தேவை என பிரித்து அனாயசமாக அடித்து இந்திய அணியை தனி ஒரு வீரராக வெல்ல வைப்பார். அப்படியான போட்டிகள் எல்லாமே கிரிக்கெட் ரசிகர்களின் மனதை விட்டு அகலாத ஒன்று.

- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது பார்ம் பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் அதை அவரும் எங்கும் மறைத்தது கிடையாது. அதிலிருந்து வெளிவரும் அதற்காக அவர் மிகக் கடுமையான உழைப்பைக் கொட்டி வருகிறார். எந்த இடத்திலும் விராட் கோலியின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் எவராலும் கேள்வி எழுப்பவே முடியாது. அந்த அளவிற்கு ஆட்டத்திலும் பயிற்சியிலும் உழைப்பைக் கொடுக்க கூடியவர்.

விராட் கோலியின் பேட்டிங் பாணியை எடுத்துக்கொண்டால் அது மரபான கிரிக்கெட் ஷாட்களை ஆடும் பாணி. ஏபி டிவில்லியர்ஸ் பாணியில் விராட் கோலி ஆட மாட்டார். இத்தனைக்கும் பெரிதாய் ஸ்வீப் ஷாட் கூட ஆட மாட்டார். மரபான கிரிக்கெட் ஷாட் மூலம் பெரிய ரன்களை கொண்டு வரக் கூடியவர். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் திறமை இருக்கும்.

தற்போது பேட்டிங் பாம் சரிந்து உள்ள காரணத்தால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோலி, பயிற்சியின்போது பந்துகளை அடித்து நொறுக்கி வருகிறார். தற்போது நாளை பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ள போட்டிக்காக துபாயில் ஐசிசி அகாடமி மைதானத்தில் பயிற்சி பெற்றுவரும் விராட் கோலி வித்தியாசமான ஷாட்கள் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்.

- Advertisement -

பயிற்சியின்போது சாகல் வீசிய ஒரு பந்தை ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் போல இடது கைக்கு திரும்பி சுவிட்ச் ஹிட் முறையில் சிறப்பாக அடித்தார். விராட் கோலி இப்படியான முறையில் பயிற்சியில் கூட விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது வேறொரு வடிவத்தில் விராட்கோலி தயாராகி வருகிறார் என்பது புரிகிறது. அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!