கடுமையான பயிற்சிக்கு இடையே 83 திரைப்படத்தை பார்த்து அதற்கு விமர்சனமும் கூறிய இந்திய கேப்டன் விராட் கோலி

0
87
Virat Kohli and 83 Movie

இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க நாட்டில் முகாமிட்டுள்ளது. கொரோனா அச்சம் இருந்தாலும் தொடரைத் தொடர்ந்து நடத்த இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் இந்த டெஸ்ட் தொடர் எந்த தடையுமின்றி நடக்க இருக்கிறது. மேலும் இதுவரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்ற விராட் கோலி தலைமையிலான அணிக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியிலும் முன்பு போல பெரிய பேட்டிங் வீரர்கள் இல்லாத காரணத்தினாலும் அந்த அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நோர்கியா தொடரில் இருந்து விலகி இருப்பது இரண்டு அணிகளையும் சம பலத்தில் வைத்துள்ளது.

ரசிகர்கள் டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சமீபத்தில் வெளியான 83 திரைப்படத்தை கேப்டன் கோலி பார்த்து ரசித்துள்ளார். கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை சுற்றி படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ரன்வீர், ஜீவா, தீபிகா படுகோன் போன்றோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை விராட் கோலி பார்த்ததோடு இல்லாமல் தன்னுடைய விமர்சனத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறும்போது 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஒட்டி நடந்த நிகழ்வுகளை இதைவிட சிறப்பாக ரசிகர்களுக்கு யாராலும் காட்ட முடியாது என்று கூறியுள்ளார். வேணும் இது மிகவும் சிறப்பான திரைப்படம் என்றும் உணர்வுப்பூர்வமாக அந்த உலகக் கோப்பை நடந்த காலத்திற்கே நம்மை அழைத்து சென்று விடுவதாக கூறியுள்ளார்.

மிகவும் மோசமான நிலையில் உலகக்கோப்பை விளையாடச் சென்ற இந்திய அணி யாருமே எதிர்பாராத வண்ணம் ஆக அந்த உலகக் கோப்பையை தனதாக்கியது. கேப்டன் கபில்தேவ், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் ரோஜர் பின்னி, மொகிந்தர் அமர்நாத் போன்ற சிறப்பான வீரர்களின் ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் போன்ற வலுவான அணியை இந்திய அணி வீழ்த்தி உலக கோப்பையில் வெற்றி பெற்றது. இக்கால கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெறும் பெயரளவில் மட்டுமே இந்த சம்பவங்கள் தெரிந்திருப்பதால் தற்போது அதை திரைப்பட வழியில் காண நல்லதொரு வாய்ப்பை இந்தத் திரைப்படக் குழு அமைத்து கொடுத்துள்ளது. அதை கோலியே பாராட்டி உள்ளதால் இந்த திரைப் படத்திற்கான வரவேற்பு இன்னமும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.