ஆஸ்திரேலிய டி20 தொடரில் பெரிய உலகச் சாதனை படைக்க காத்திருக்கும் விராட்கோலி!

0
403
Virat kohli

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இரண்டரை வருட காலத்திற்குப் பிறகு சதமடித்து தனது சத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக விராட்கோலி ஃபார்முக்கு திரும்பியிருப்பது, அவரை மட்டுமல்லாது அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பேட்டிங் ஃபார்ம் சரிந்திருந்த விராட் கோலி தற்காலிக ஓய்வாக கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் விலகி இருந்து, ஆசிய கோப்பைக்கு அணிக்குத் திரும்பினார். இந்தத் தொடரில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் என 276 ரன்கள் குவித்து இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதனால் இவரது ஒட்டுமொத்த சர்வதேச போட்டி ரன் கணக்கு 24,002 என உயர்ந்தது. இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 24,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி உடன் முதலில் நடைபெற இருக்கும் டி20 தொடரில் முதல் போட்டியில் இன்று பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி நகரில் விளையாட இருக்கிறது.

இந்தத் தொடரில் விராட் கோலி 207 ரன்களை மொத்தமாக எடுத்தால், சர்வதேச அளவில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தையும், அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடிப்பார். ராகுல் டிராவிட் 24,008 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர் என்கிற இடத்தில் ஆறாவது வீரராகவும், அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்கின்ற இடத்தில் இரண்டாவது வீரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இடம் விராட் கோலி 100 சதங்கள் அடித்து இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சினின் உலக சாதனையை முறியடிப்பாரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங் ” இதே கேள்வியை மூன்று வருடங்களுக்கு முன்னால் என்னிடம் கேட்டிருந்தால் உடனே முடியும் என்று சொல்லி இருப்பேன். ஆனால் இடையில் ஒரு மூன்று வருட காலங்கள் மெதுவாகப் போய்விட்டது. ஆனால் இப்பொழுதும் விராட் கோலி கால் சச்சினின் சாதனையை எட்ட முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியாவுடன் நடக்க இருக்கும் டி20 தொடரில் விராட்கோலி இந்த சாதனையை எட்ட முடியாமல் போனாலும் கூட, அடுத்து சவுத்ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெற உள்ள டி20 தொடரில் கட்டாயம் இந்த சாதனையை செய்து விடுவார் என்பது உறுதி.