நான் பெங்களூரு அணிக்குள் நுழைந்ததுமே விராட் கோலி எனக்கு இந்த மெசேஜ் அனுப்பினார் – ஹர்ஷல் பட்டேல் நெகிழ்ச்சி

0
173
Harshal Patel and Virat Kohli

இந்தியா தற்போது ஐபிஎல் திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. இதுவரை 8 அணிகள் பங்கேற்கும் தொடராக இருந்த இது தற்போது முதல் பத்து அணிகள் பங்கேற்கும் தொடராக மாறப்போகிறது. இரண்டு புதிய அணியாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் லக்னோ அணிக்கு கே எல் ராகுல் கேப்டன் என்றும் அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுமே ஏலம் நடைபெறும் முன்னதாகவே 2 இந்திய வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரும் என மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்ற அணிகளில் நாம் அதிகபட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்கள் யார் என்ற பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு ஏலத்துக்கு காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கும் முக்கிய அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்து இந்த அணி விளையாடி வருகிறது. ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்ற விட்டாலும் இந்த அணிக்கு அதிக ரசிகர் படை உண்டு.

கடந்த முறை ஐபிஎல் தொடர் நடந்தபோது அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஹர்சல் பட்டேல். 15 ஆட்டங்களில் பங்கேற்று விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு தொடரில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள் இதுவாகும். இருந்தாலும் இவரைப் இந்த முறை பெங்களூரில் நிர்வாகம் தக்க வைக்கவில்லை. இவரும் இந்தமுறை ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

தற்போது இவர் தான் முதன் முதலில் பெங்களூர் அணிக்காக தேர்வான போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். பெங்களூரு அணிக்கு தேர்வான உடனேயே விராட் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் அதில் நான் அனைத்துப் போட்டிகளையும் நிச்சயம் விளையாடுவேன் என்று அவர் உறுதி கூறினார் என்றும் கூறியுள்ளார் ஹர்சல் பட்டேல். மேலும் இந்த உத்வேகதான் தனக்கு நம்பிக்கை அளித்ததாக இவர் கூறியுள்ளார்.

மேலும் தான் தக்கவைக்கப்படாதது குறித்து பேசிய இவர் இது அணியின் முடிவு என்றும், ஒரு அணியில் அவர்கள் விரும்பும் ஆட்டத்திறன் ஒரு வீரருக்கு இல்லை என்றால் அந்த அணியில் நீடிக்கும் எந்த அணிக்கு அந்த வீரர் தேவைப்படுகிறாரோ அந்த அணிக்கு மாறுவதுதான் சிறந்தது என்று பேசியுள்ளார். ஹர்சல் பட்டேல் இந்த முறை எந்த அணிக்கு விளையாடப் போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.