“தயவுசெஞ்சு என்னை விட்ருங்க.. இனிமே விராட் கோலி கூட பேட்டிங் மட்டும்..” அப்படி என்ன நடந்தது? – சூரியகுமார் யாதவ் பேட்டி!

0
10707

விராட் கோலியுடன் பேட்டிங் செய்தால் இதுதான் நடக்கும் என்று பேட்டி அளித்திருக்கிறார் சூரியகுமார் யாதவ்

இந்திய அணியில் மிகவும் கட்டுக்கோப்பான வீரராக இருந்து வருபவர் விராட் கோலி. தொடர்ச்சியான உடற்பயிற்சியின் மூலம் மிகவும் பிட்டாக இருக்கிறார்.

மைதானத்தில் பவுண்டரி அருகே நின்று துடிப்புடன் பில்டிங் செய்வார். அடுத்த நிமிடமே பேட்டரியில் களமிறங்கி கடைசி வரை விளையாடுவார். போட்டி முழுவதும் முழு எனர்ஜியுடன் காணப்படுவார்.

அதே போல் ஹார்திக் பாண்டியாவும் இந்திய அணியில் பிட்டான வீரராக இருக்கிறார். பவுலிங், பேட்டிங், பீல்ட்டிங் என மூன்றிலும் அசத்தி வருகிறார்.

இவர்கள் இருவருடனும் நீண்ட நேரம் பேட்டிங் செய்து இருக்கிறார் சூரியகுமார் யாதவ். விராட் கோலியுடன் சேர்ந்து சமீபகாலமாக நிறைய போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றியை பெற்று தந்து வருகிறார்.

ஹர்திக் பண்டியாவுடன் சர்வதேச போட்டிகளில் நிறைய விளையாடவில்லை என்றாலும் ஐபிஎல்லில் மும்பை அணியில் இருக்கும் பொழுது இருவரும் சேர்ந்து நிறைய போட்டிகளில் பாட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு வீரர்களுடன் விளையாடியதில் யாருடன் பேட்டிங் செய்யும்பொழுது வேகமாக ஓட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூரியகுமார் யாதவ் அழகாக பதில் கூறியிருக்கிறார்.

“மிகவும் பிட் ஆன வீரர் என்றால் விராட் கோலி தான். அவருடன் நான் பேட்டிங் செய்வதை மிகவும் விரும்புவேன். ஒன்று மட்டும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் அவருடன் பாட்னர்ஷிப் அமைக்கும் பொழுது நிறைய ரன்களை ஓடி எடுக்க வேண்டியது வரும். கடைசி வரை ஒரே எனர்ஜியில் அவர் மட்டும் இருப்பார். நம்மால் ஈடு கொடுக்க முடியாது சூப்பர் ஃபிட் வீரர்.”

“விராட் கோலி உடன் விளையாடுவது தான் நன்றாகவும் இருக்கும் கடினமாகவும் இருக்கும். இறுதியில் அணியின் வெற்றி முக்கியம் என்பதால் எந்த சவாலையும் ஏற்று விளையாடுவதற்கு தயாராக தான் இருக்கிறேன்.” என்று மனம் திறந்து தனது பதிலை கொடுத்தார் சூரியகுமார் யாதவ்.