வீடியோ: எப்புட்றா.. அவுட் ஆனதை நம்ப முடியாமல் திகைத்து நின்ற விராட் கோலி; துள்ளி குதித்து கொண்டாடிய பவுலர்!

0
10978

முதல் டெஸ்ட் போட்டியில் எல் பி டபிள்யூ ஆனதே நம்ப முடியாமல் திகைத்து நின்ற விராட் கோலியின் வீடியோ வைரலாகி வருகிறது.

சிட்டோகிராம் மைதானத்தில் வங்கதேசம்-இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.

- Advertisement -

கில்-ராகுல் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது, தாஜுல் இஸ்லாம் பந்தில் சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டம் இருந்தார். அடுத்த சில பந்துகளிலேயே கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களுக்கு கலீத் அஹ்மது பந்தில் அவுட் ஆனார்.

இந்த தொடரின் 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்து கலக்கிய விராட் கோலி மீது டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் துரதிஷ்டவசமாக அவர் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து தாஜுல் இஸ்லாம் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

அவுட் என அறிவிக்கப்பட்டதும் ஒருநிமிடம் எப்படி என்று புரியாமல் திகைத்து களத்திலேயே நின்றார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

வீடியோ:

45/3 என இந்திய அணி தடுமாறி வந்த போது, துணை கேப்டன் சித்தேஷ்வர் புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். உணவு இடைவேளை வரை, புஜாரா 12 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணி 85/3 என இருந்தது.

உணவு இடைவேளைக்கு பின் ஆட்டத்தை தொடர்ந்த ரிஷப் பண்ட் 46 ரன்களுக்கு மெஹ்தி ஹாசன் பந்தில் போல்டாகினார். பின்பு உள்ளே வந்த ஷ்ரேயாஸ் ஐயர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகின்றார். இந்திய அணி 155/4 என விளையாடி வருகிறது. புஜரா 37 ரன்கள் மற்றும் ஷ்ரேயாஸ் 27 ரன்களுடன் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.