ஆஸ்திரேலியா டெஸ்ட்ல விராட் கோலிய நம்பவேண்டாம்; அவரை விக்கெட் எடுக்குற ட்ரிக் தெரிஞ்சிருச்சு – வாசிம் ஜாபர் அறிவுரை!

0
860

விராட் கோலியை விக்கெட் எடுக்கும் யுக்தியை எதிரணிகள் கற்றுக்கொண்டார்கள் என அறிவுறுத்தியுள்ளார் வாசிம் ஜாபர்.

2019ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் ஃபார்மிற்கு திரும்பினார். அதன் பிறகு நடந்த டி20 உலக கோப்பையிலும் அபாரமாக செயல்பட்டார்.

- Advertisement -

வங்கதேசம் அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில், கிட்டத்தட்ட 3 வருடத்திற்கு பின் ஒருநாள் போட்டிகளில் சதமடித்தார். பின்னர் இந்தியாவில் இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் 2 சதங்கள் விளாசி மீண்டும் சதம் வேட்டையை தொடர்ந்தார்.

ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி 2 போட்டிகளிலும் தனது பார்மிற்கு தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 8 ரன்கள் மற்றும் 11 ரன்களுக்கு, இரண்டு போட்டிகளிலும் சான்டனர் பந்தில் அவுட்டாகினர்.

விராட் கோலிக்கு லெக் ஸ்பின்னர்களிடம் பலவீனம் இருந்து வந்திருக்கிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடமும் இருந்திருக்கிறது. நியூசிலாந்து தொடரில் அது வெளிப்பட்டுவிட்டது என குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர்.

- Advertisement -

“நியூசிலாந்து சீரிஸில் சரியாக செயல்படாதது மற்றும் ஆட்டமிழந்தது விராட் கோலிக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். இதற்கு முன்னரும் விராட் கோலிக்கு லெக் ஸ்பின்னர்களிடம் பிரச்சனை இருந்திருக்கிறது. அடில் ரசீத் மற்றும் ஆடம் ஜாம்பா போன்றவர்களிடம் திணறி இருக்கிறார். தற்போது இடது கை ஸ்பின்னரிடம்(சான்டனர்) திணறி வருகிறார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறந்த கம்பேக் கொடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வரவிருக்கிறது. அங்கு நாதன் லயன் உட்பட சிறந்த பவுலிங் யூனிட் இருக்கிறது. விராட் கோலி மீது அதீத நம்பிக்கை நிலவி வருகிறது. ரன்கள் அடிப்பார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதனை சரி செய்வார் எனவும் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

“மீண்டும் ஒருமுறை இப்படி அவர் ஆட்டமிழந்தால், விராட் கோலி மீதான நம்பிக்கையே இல்லாமல் போய்விடக்கூடும்.” எனவும் பேசினார்.