முதலில் சண்டை பிறகு பரிசு.. விராட் கோலியின் தாராள மனசு

0
591

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி வென்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் மகதி ஹசன் தான். வங்கதேச அணி ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் வென்றதற்கு மகதி ஹசனின் பங்கு பெரிய அளவில் இருந்தது.  எனினும் முதல் டெஸ்டில் மகதி ஹசன்   மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் கடைசி இன்னிங்ஸில் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி வீரர்களின் தடுமாறினார். குறிப்பாக விராட் கோலி 22 பந்துகள்  எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 37 சேர்ப்பதற்குள்  நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. விராட் கோலி விக்கெட் வீழ்த்தியதை ஓவராக மகதி ஹசன் கொண்டாடினார். இதனால் கடுப்பான விராட் கோலி அவரிடம் சென்று சண்டை போட்டார்.

வா உன்னை பார்த்துக்கிறேன் என்பதுபோல் கோலி பேசினார். இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியை வங்கதேச பெரும் எதிர்பார்த்த நிலையில் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஜோடி அபாரமாக விளையாடி தோல்வியைத் தவிர்த்தது. இந்த நிலையில் போட்டியின் போது சண்டையிட்ட விராட் கோலி ஆட்டம் முடிந்த பிறகு மகதி ஹசனை அழைத்து தன்னுடைய ஜெர்சியை கையெழுத்து இட்டு அதனை மகதி ஹசனுக்கு கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட மகதி ஹசன்,  முகநூலில் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்கள் ஒருவர் எனக்கு கொடுத்த பரிசு என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

போட்டியின் போது சண்டையிட்டாலும் அவருடைய திறமைக்கு மதிப்பளித்து விராட் கோலி செய்த காரியம் இருநாட்டு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஷகிபுல் ஹசன் டாக்கா ஆடுகளம் வங்கதேசத்திற்கு ஏற்ற வகையில் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவோம் என நினைத்தோம். என்னுடைய வீரர்கள் விளையாடியதை பார்த்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இரண்டு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் இந்த டெஸ்ட்  ரசிகர்களுக்கு நல்ல அனுபவம் கொடுத்திருக்கும் என்று கூறினார்.