அக்.23 ஆம் தேதியை மறக்க மாட்டேன்.. டி20யிலிருந்து விலகல்? விராட் கோலியின் பதிவால் ரசிகர்கள் அச்சம்

0
225

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதிலிருந்து சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, புதிய அணியை பிசிசிஐ தயார் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.இதற்கு முதல் படியாக நியூசிலாந்தில் நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் களமிறக்க பட்டனர்.

- Advertisement -

விராட் கோலி, ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தியாவுக்கு சென்று ஓய்வில் இருந்தனர். அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவதால் டி20யில் மூத்த வீரர்கள் களம் இறங்க வாய்ப்பு இல்லை. இதனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சீனியர்கள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விராட் கோலி சமூக வலைத்தளத்தில் திடீரென்று ஒரு பதிவை போட்டுள்ளது ரசிகர்களே அச்சத்தை ஏற்படுத்தியது. அதில் அக்டோபர் 23 2022 ஆம் ஆண்டு என் இதயத்தில் எப்போதுமே சிறந்த நாளாக இருக்கும். இது போன்ற ரசிகர்களின் ஆரவாரம் நிறைந்த போட்டியை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அன்றைய தினம் எனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாள் போல் இருந்தது என்று விராட் கோலி பெவிலியன் நோக்கி செல்வது போல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விராட் கோலி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை தான் இப்படி அறிவித்திருக்கிறார் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் டெஸ்ட் போட்டிக்காக டி20 போட்டிகளை விராட் கோலி விட்டு செல்கிறார் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தோனி ஓய்வு முடிவு பெறும் போது இதே போன்று தான் ஒரு பதிவை போட்டிருந்தார். தற்போது விராட் கோலி அதே பாணியில் டி20 போட்டியில் இருந்து செல்கிறாரோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது. எனினும் இது சாதாரணமாக விராட் கோலி போட்ட பதிவுதான் என்றும் , டி20 கிரிக்கெட் இருந்து அவர் தற்போது விடை பெற மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -