அனுஷ்கா சர்மா வீடியோ காலில் இருந்ததை ரசிகர்களிடம் காட்டிய விராட் கோலி – வீடியோ இணைப்பு!

0
43
Viratkohli

தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் என இரண்டு தொடர்களில் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ளது!

இந்த இரண்டு தொடர்களில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டி ஒரு குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக அமைந்தது!

டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்து வீச்சை தீர்மானிக்க, களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் அர்ஸ்தீப் ஆகியோரின் ஸ்விங் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. பின்பு சுதாரித்து பந்துவீச்சாளர்கள் ரன் சேர்க்க 20 ஓவர்களின் முடிவில்107 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் 3 விக்கெட்டுகள், தீபக் சஹர் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதையடுத்து சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடனே வெளியேறினார்கள். பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சூரியகுமார் அதிரடியாய் விளையாட, இன்னொரு முனையில் விளையாடிய கேஎல் ராகுல் மெதுவாக விளையாட, ஒருவழியாக இருவரும் அரைசதம் அடிக்க, 16.4 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் அடுத்த இரு ஆட்டங்கள் நான்காம் தேதி மற்றும் ஆறாம் தேதி நடக்கிறது.

இந்தப் போட்டி முடிந்து இந்திய அணி வீரர்கள் கிளம்பி ஹோட்டலுக்கு செல்லும்பொழுது வழியில் ரசிகர்கள் எக்கச்சக்கமாக குவிந்து இருந்தனர். இந்திய அணியினர் வரும் பேருந்தை பார்த்ததும் அவர்களால் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் நின்ற பக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா அமர்ந்திருந்தார் அதற்கு அடுத்து விராட்கோலி அமர்ந்திருந்தார். விராட் கோலியை பார்த்த ரசிகர்கள் அவரது பெயரை கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவர் பேருந்துக்குள் இருந்து தனது மொபைலை கண்ணாடிவழியாக காட்டினார். அதில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா வீடியோ காலில் இருந்தது தெரிந்தது. ரசிகர்களுக்கு அதைப்பார்த்ததும் இன்னும் மகிழ்ச்சி அதிகமாகிவிட்டது. தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததை தன் ரசிகர்களிடம் விராட் கோலி காண்பித்ததை, ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதற்கான வீடியோ இணைப்பு கீழே உள்ளது.