விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் – பாகிஸ்தான் சோயிப் அக்தர் பரபரப்பு பேச்சு!

0
53759
Akthar

இந்தியா பாகிஸ்தான் அணிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று முன்தினம் மோதி முடித்து விட்டன. ஆனாலும் இப்போது வரை அந்த ஆட்டம் குறித்து தான் கிரிக்கெட் உலகத்தில் பேச்சாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் இந்தப் போட்டி தான் உச்சபட்ச திருப்பங்களோடு அமைந்திருந்தது.

மேலும் உலகின் எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் நேற்று முன்தினம் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தை மிக நெருக்கமாக பார்த்திருப்பார்கள். அந்த அளவிற்கு ஆட்டம் நாடுகளைத் தாண்டி கிரிக்கெட் போட்டி என்ற அளவில் எல்லோரையும் கவர்ந்து இருந்தது.

இந்த போட்டி முதலில் ஆரம்பித்த பொழுது இந்தியா பக்கம் இருந்தது, பின்பு பாகிஸ்தான் பக்கம் சென்று மீண்டும் இந்தியா பக்கம் வந்து மீண்டும் பாகிஸ்தான் பக்கம் சென்றது. பாகிஸ்தான் பந்து வீசும் பொழுது ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் இருந்தது. பத்து ஓவர்களுக்கு பிறகு மொத்தமாக அப்படியே படிப்படியாக இந்தியா பக்கம் வந்துவிட்டது.

மிகக் குறிப்பாக கடைசி ஓவர் அதிகபட்ச திருப்பங்களோடு அமைந்து இந்த போட்டியை பார்த்த யாராலும் மறக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டது. தற்போது இந்த போட்டி குறித்தும் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி அக்தர் கூறும் பொழுது “சோகமாக இருக்காதீர்கள். பாகிஸ்தான் இந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டு இருந்தது. நீங்கள் அனைவரும் நல்ல முறையில் விளையாடினிர்கள். இந்திய அணியினர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டி ஒன்றை வென்றனர். இது ஒரு முழுமையான உலகக் கோப்பை போட்டி. ரன் அவுட் நோபால் சர்ச்சை என்று எல்லாவற்றையும் இது கைவிட்டது. உலகக்கோப்பை இப்போதுதான் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டிகளுக்கு பிறகுதான் துவங்கியுள்ளது. இதே உலக கோப்பையில் மீண்டும் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளும் ” என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அக்தர்
“நீங்கள் கீழே இருக்கும் பொழுது, உங்களது தன்னம்பிக்கை புத்துயிர் பெற வேண்டும். அப்பொழுது நீங்கள் இன்னொருவராக மாறுவீர்கள். அதன் ஒரு வடிவம்தான் விராட் கோலி. அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அவர் தனது முழு ஆற்றலையும் டி20 கிரிக்கெட்டில் செலவிடுவதை நான் விரும்பவில்லை. இதுபோன்ற அர்ப்பணிப்புடன் அவர் செயல்பட்டால் ஒருநாள் போட்டியில் 3 சதங்கள் வரும். எனவே அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும் ” என்று கூறியுள்ளார்!