ராஜஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சுயநலமாய் விளையாடி இருக்க வேண்டும் – முன்னாள் இந்திய வீரர் கருத்து

0
98
Virat Kohli duck out

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன், இந்திய கிரிக்கெட் அணியின் பலகீனமான பகுதிகளைப் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி நகர்ந்து கொண்டிருக்கிறது. உம்ரான் மாலிக், ஆயுஷ் பதோனி, குல்தீப் சென், யாஷ் தயால், மோசின் கான் போன்ற இந்திய இளம் வீரர்களும், தினேஷ்கார்த்திக், உத்தப்பா போன்ற மூத்த வீரர்களும், காயத்திலிருந்து மீண்ட நடராஜன் போன்ற வீரர்கள் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணியின் அங்கமாக விளங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, விராட்கோலி, ரிஷாப் பண்ட், இஷான் கிஷன் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் இந்திய அணியின் கேப்டன், முன்னாள் கேப்டனின் ஆட்டம் மிகவும் பரிதாபமாய் இருக்கிறது. குறிப்பாய் விராட்கோலியின் பேட்டிங் டச் வரையிலும். இதைக் குறிப்பிட்டு சஞ்சய் மஞ்ரேக்கர் ரோகித்தை விட பேட்டிங் டச்சில் விராட் மோசமாய் இருக்கிறார் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டம் அல்லாது, அதற்கு முந்தைய இரண்டு ஆட்டங்களில் கோல்டன் டக் அடித்ததோடு, எட்டு ஆட்டங்களில் 119 ரன்களை மட்டுமே விராட் கோலி அடித்திருந்தார். இதைச் சரிசெய்வதற்கும், பேட்டிங் பார்மிற்கு அவர் திரும்புவதற்கும், நேற்றைய ஆட்டத்தில் நல்ல ஒரு வாய்ப்பிருந்தும் அதை விராட்கோலி தவறவிட்டு மீண்டும் சீக்கிரத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைப்பற்றி இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் முகம்மத் கைப் கூறும்பொழுது, “நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் பேட்டிங் பார்ம் வருவதற்கு நல்ல வாய்ப்பிருந்தும். அதை விராட்கோலி தவறவிட்டு விட்டார். இந்த மாதிரியான நேரங்களில் தனக்காகச் சுயநலமாக ஆடுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அவர் தைரியமாய் ஆட போய் ஆட்டமிழந்துவிட்டார்” என்று கூறியிருக்கிறார்!