“விராட் கோலி இனிமே டி20 டீம்ல ஆடி என்ன பண்ணப்போறாரு.. ரிட்டையர் ஆகணும்” – கம்பீர் பேட்டி!

0
497

விராட் கோலி இனிமேல் டி20 போட்டிகளில் விளையாடாமல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

- Advertisement -

வங்கதேசம் அணியுடன் நடந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியாவிற்கு திரும்பியுள்ள இந்திய அணி வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜனவரி 3ஆம் தேதி துவங்கவிருக்கும் இந்த இரண்டு தொடர்களுக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. டி20 போட்டிகளில் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் t20 அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நீக்கம் தற்காலிகமாக இருக்குமா? அல்லது இனி டி20 அணிகளில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்களா? என்கிற பல கேள்விகளும் சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில், இனி விராட் கோலி டி20 போட்டிகளில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அது ஆரோக்கியமானது தான் என கருத்து தெரிவித்திருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் பேசியதாவது:

“விராட் கோலியை வெளியேற்றியது சிக்கலான முடிவு தான். ஆனால் இளம் வீரர்களை கொண்ட அணியை உருவாக்குவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. இந்தத் திட்டமும் சிறப்பான ஒன்றுதான்.

கேஎல் ராகுல், ரோகித், விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக விளையாட வேண்டும். அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களும் நன்றாக செயல்படுகிறார்கள். அவர்களை மிஞ்சும் அளவிற்கு விளையாடி மீண்டும் அணிக்குள் இடம் பிடிக்க வேண்டும்.

இதற்கு பதிலாக விராட் கோலி இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தினால் கூடுதல் சிறப்பாக இருக்கும். டி20 போட்டிகளில் இனி அவர் நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை. இந்த தருணத்தில் டி20 போட்டிகளில் ஓய்வு முடிவு அறிவித்தாலும் அது தவறானதாக இருக்காது.” என்றார்.