டி20 உலகக்கோப்பையில் உலகச் சாதனை படைத்தார் விராட் கோலி!

0
6291
Viratkohli

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் அடிலைடு மைதானத்தில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு வருகிறது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதில் அக்சர் படேல் இடம் பெற்று இருக்கிறார். வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

- Advertisement -

துவக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் களமிறங்கினார்கள். இந்த ஆட்டத்திலும் இருவரது தடுமாற்றமும் தொடர்ந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ரன்கள் வராத அழுத்தத்தால் மிக எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்து ஆட்டம் இழந்தார்!

இதற்கு அடுத்து களம் இறங்கிய விராட் கோலி முதல் பந்தில் ஒரு ரன்கள் எடுத்து அதற்கு அடுத்த இரு பந்துகளில் இரு பவுண்டரிகள் தொடர்ந்து அடித்தார். இதைத்தொடர்ந்து தடுமாறி வந்த கே எல் ராகுல் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

விராட் கோலி இந்த ரன்கள் அடித்த காரணத்தால் டி20 உலக கோப்பை தொடர்களில் ஒரு புதிய உலக சாதனையை படைத்திருக்கிறார். டி20 உலகக் கோப்பைகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை அணியின் ஜெயவர்த்தனமிடமிருந்து பறித்தார்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்கள் :

விராட் கோலி 1017 ரன்கள்
ஜெயவர்த்தன 1016 ரன்கள்
கிரீஸ் கெயில் 965 ரன்கள்
ரோகித் சர்மா 925 ரன்கள்

இந்த ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடி தற்பொழுது அரைசதம் அடித்து ஆட்டம் இழந்து இருக்கிறார். இந்திய அணி தற்பொழுது இந்த ஆட்டத்தில் நல்ல நிலையில் இருக்கிறது. விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார்.