என்னைப் பொறுத்தவரை இவர் தான் 2022 ஐபிஎலில் சிறந்த வீரர் – விராட் கோலி

0
2838
Virat Kohli

2018ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கொல்கத்தா அணியில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு பெங்களூரு அணியில் அதிரடி பினிஷராக விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அவரை 5 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இதற்கு முன்னரே 2015ம் ஆண்டு பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் விளையாடி இருக்கிறார்.

2015ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 141 ரன்கள் மட்டுமே அவருக்கு பெங்களூரு அணிக்காக குவித்திருந்தார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 120.51 மற்றும் பேட்டிங் ஆவெரேஜ் 12.82.

- Advertisement -
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு

பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார். 6 போட்டிகளில் மொத்தமாக 197 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 209.57ஆக உள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 197 ஆக உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இதற்கு முந்தைய வருடங்களில் ஏபி டிவில்லியர்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார். அதுமட்டுமின்றி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு அதிரடியாக விளையாடுவார். தற்பொழுது அந்த ஆட்டத்தில் துளி அளவு கூட குறையாத விதத்தில் தினேஷ் கார்த்திக் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார்.

விராட் கோலி பெருமை

பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பெங்களூரு அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தினேஷ் கார்த்திக் குறித்து பெருமையாக தற்பொழுது பேசியிருக்கிறார். “நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் சிறந்த வீரராக தினேஷ் கார்த்திக் விளங்கிக் கொண்டிருக்கிறார். 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இத்தனை வருடங்களில் தினேஷ் கார்த்திக்கின் சிறந்த ஆட்டத்தை,நடப்பு ஐபிஎல் தொடரில் நான் கண்டு மகிழ்கிறேன். தினேஷ் கார்த்திக் ஆடும் விதத்தையும் பெங்களூர் அணிக்கு வெற்றி தரும் விதத்தில் தினேஷ் கார்த்திக் பினிஷிங் செய்வதை பார்க்கும் பொழுது ஏபி டிவில்லியர்ஸ் மிகவும் சந்தோஷப்படுவார் என்றும் கூறியுள்ளார்.