பட்டலர் விக்கெட்டுக்கு முன்னால் விராட் கோஹ்லி செய்த விஷயம் – ஆச்சிரியத்தில் ரசிகர்கள்

0
1788
Virat Kohli India vs England

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். ஏற்கனவே உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரை வெல்லும் அற்புதமான வாய்ப்பை இதே இங்கிலாந்து நாட்டில் வைத்து தவறவிட்ட விரக்தியில் களமிறங்கியது இந்திய அணி.

ராரி பர்ன்ஸின் விக்கெட்டை விரைவிலேயே எடுத்து ஆட்டத்தை தன் வசப்படுத்தியது இந்தியா. இந்திய அணியின் பும்ரா, ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியின் ரன் வேகத்தைத் தடுத்துக் கட்டுப்படுத்தினர். சீரிய இடைவெளியில் கிராளி, சிப்லியின் விக்கெட்டையும் இந்திய வீரர்கள் கைப்பற்ற அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினார் கேப்டன் ரூட்.

ரூட் மற்றும் பேர்ஸ்ட்டோ இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியை மெல்ல மீட்டனர். இந்த இணை மெதுவாக ஆட்டத்தை இந்திய அணியிடம் இருந்து பறித்துக் கொண்டு போகையில் முகமது ஷமி பேர்ஸ்ட்டோ மற்றும் டேன் லாரன்ஸை ஒரே ஓவரில் அவுட் ஆக்க கேப்டன் ரூட்டுடன் இணைந்து ஆட களத்திற்குள் வந்தார் அதிரடி வீரர் பட்லர்.

பட்லர் சிறிது நேரம் களத்தில் நின்று ஆட்ட சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டார் என்றால் அவரைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆட்டத்தையே மாற்றி அமைத்து விடும் அவரது பேட்டிங். அப்படிப்பட்ட வீரரை விரைவில் வெளியேற்ற தான். எந்த அணியும் விரும்பும். அதே போல பட்லர் உள்ளே வந்ததுமே தனது முழு திறனையும் காட்டி பந்து வீச ஆரம்பித்தார் பும்ரா. பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் பட்லர். ஆட்டத்தின் 54வது ஓவர் முழுவதும் ரன் எதுவும் வராமல் மெய்டன் ஆனது.

பட்டலர் விக்கெட்டை கணித்த கேப்டன் கோலி

56வது ஓவரை வீச வந்த பும்ரா மிகவும் சிறப்பாக வீசினார். பட்லருக்கு இரண்டு பந்துகள் வீசிய உடனேயே ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த விராட் கோலி இரண்டு முறை ரிஷப் பண்ட் மற்றும் ரோகித்திடம் இவர் சிறப்பாக வீசுகிறார்… அப்படியே வீசட்டும் என்பது போல சைகை செய்தார். சிரித்துக் கொண்டே இப்போது ஒரு விக்கெட் விழப் போகிறது என்பது போல செய்து கொண்டிருந்தார் கோலி. அவர் நினைத்தது போலவே அடுத்த பந்திலேயே ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பட்லர்.

விக்கெட் விழப்போவதை சரியாக கணித்த கேப்டன் கோலியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.