உலக கோப்பை டி20 தொடரில் ராகுல் சஹர் இடம் பெறும் வேளையில் சஹால் இடம் பெறாத காரணம் இது தான் – விளக்கிக் கூறும் விராட் கோலி

0
198
Virat Kohli and Rahul Chahar

ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. இன்று முதல் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கின்றது. சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில், மீதமுள்ள நான்கு அணிகளை தீர்மானிக்கும் குரூப் சுற்று போட்டிகள் இன்று முதல் வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரையில் ஸ்பின் பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர் மற்றும் வருன் சக்கரவர்த்தி அணியில் இடம்பெற்றுள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சஹால் மிக அற்புதமாக பந்துவீசியும், அவரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்கிற கேள்வி அனைத்து இந்திய ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. அவர்கள் கேள்விக்கு விராட் கோலி தன் விளக்கம் மூலமாக தற்போது பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

சஹால் நன்கு விளையாடியும் ராகுல் சஹர் அணியில் நீடிக்க இதுவே காரணம்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் ராகுல் சஹர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மறுபக்கம் சஹால் 15 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இவர்களில் ராகுல் சஹர் இறுதி நேரத்தில் அவ்வளவாக விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஒரு சில போட்டிகளில் இவரை அணியில் தேர்ந்தெடுக்காதது குறிப்பிடத்தக்கது. ஆனால் சஹால் அனைத்து போட்டியிலும் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடினார்.

இப்படி இருக்க ராகுல் சஹர் அணியில் நீடிக்க என்ன காரணம் என்பதை தற்போது விராட் கோலி கூறியுள்ளார். ராகுல் சஹர் கடந்த ஒரு சில ஐபிஎல் தொடர்களில் மிக அற்புதமாக ஆடி வருகிறார். ஸ்பின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக நல்ல முன்னேற்றத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி நல்ல பேஸ் லென்த்திலும் அவர் வந்து வீசி வருகிறார். நாட்கள் செல்லச் செல்ல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் லோ ஸ்கோரிங் போட்டிகளாகவே முடியும்.

எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுல் சஹரின் பந்துவீச்சு இந்திய அணிக்கு பெரும் அளவில் கைகொடுக்கும். அதுமட்டுமின்றி ஸ்டம்பை நோக்கி அவர் கன கச்சிதமாக குறிவைத்து பந்து வீசுவார். இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் ராகுல் சஹரை விளையாட வைக்க முடிவு செய்தோம் என்று விராட் கோலி தற்போது விளக்கியுள்ளார்.

- Advertisement -

புவனேஸ்வர் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவும்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புவனேஸ்வர் குமார் தன்னுடைய பழைய ஸ்விங் வேகத்தை அவ்வளவாக வெளிக்காட்டவில்லை. இருப்பினும் அவரது பவுலிங் எக்கானமி மிகக் குறைவாகவே இருந்தது. குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் புவனேஸ்வர் குமார் ஏபி டிவில்லியர்ஸ்க்கு எதிராக மிக சிறப்பாக பந்து வீசி வெற்றியை ஹைதராபாத் அணி பக்கம் எடுத்துச் சென்றார். விராட் கோலி இதை குறிப்பிட்டு, மிகச் சிறந்த பேட்ஸ்மேன் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் புவனேஸ்வர் குமார் தன்னுடைய அனுபவம் மூலமாக அந்த போட்டியை தன் பக்கம் இழுத்து சென்றார். குறிப்பாக புதிய பந்துகளில் அவருடைய பந்துவீச்சுமிக அபாரமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

அதேபோல ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடுவது தனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். கடந்த ஒரு சில ஐபிஎல் தொடர்களில் அவர் மிகவும் தைரியமாக தன்னுடைய பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். விரல்களைப் பயன்படுத்தி மிக அற்புதமான ஸ்பின் பந்துகளை போடுவதில் அஷ்வின் கை தேர்ந்தவர். எனவே அவரது அனுபவமும் இந்திய அணிக்கு நிச்சயமாக உதவும்.

இறுதியாக பேசிய விராட்கோலி நிச்சயமாக எங்களுடைய நோக்கம் நடக்க இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரை வென்றுவிட வேண்டும் என்பதுதான். நீண்டகாலம் எங்களது அணி குறித்த பேச்சு இருக்கும் அளவுக்கு விளையாட வேண்டும் அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.