ஒரு சில அணிகள் என்னை ஏலத்திற்கு வருமாறு கேட்டனர் – ரகசியத்தை உடைதுள்ள விராட் கோஹ்லி

0
681
Virat Kohli RCB

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த 2008-ஆம் ஆண்டிலிருந்து தற்பொழுது முறை பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். தற்பொழுது உள்ள வீரர்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்து இன்றைய தேதி வரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரரும் அவர் மட்டுமே.

சமீபத்தில் பேசியுள்ள விராட் கோலி தன்னை வேறு சில கள் வாங்க முயற்சித்ததாகவும், ஆனால் கடைசி வரை தான் ஆர்சிபி அணியில் மட்டுமே விளையாடுவேன் என்று கூறி அதை மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

கடைசிவரை பெங்களூரு அணிக்கு விசுவாசமாக இருப்பேன்

முதல் மூன்று ஆண்டுகள் பெங்களூரு அணி நிர்வாகம் என் மீது நிறைய நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது. அந்த ஒரு காரணத்தை ஒரு பொழுதும் நான் மறந்துவிட மாட்டேன். கடைசிவரை பெங்களூரு அணியில் மட்டுமே விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் வேறு சில அணிகள் என்னை அவர்களது அணியில் விளையாட வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் நான் அந்த அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை. வாழ்க்கையில் நாம் நல்ல மனிதராக இருக்கும் பொழுது நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை கொண்டாடுவார்கள். நாம் கெட்ட மனிதராக இருக்கும் பொழுது நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். அதுதான் வாழ்க்கை, நான் என்னுடைய வாழ்க்கையின் இறுதிவரை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன்.

ஒருவேளை வேறு ஒரு அணியில் சென்று நான் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றலாம். அப்பொழுது ஒரு வழியாக நீங்கள் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி விட்டீர்கள் என்று மற்றவர்கள் என்னிடம் கூறுவார்கள். அவர்கள் கூறும் அந்த வார்த்தையை விட கடைசி வரை நான் ஆர்சிபி அணியில் விசுவாசியாக விளையாடுவதையே மேன்மையாக பார்க்கிறேன் என்று விராட் கோலி விளக்கிக் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அவரை 15 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக விராட் கோலியின் பெயர் ஐபிஎல் ஏலத்தில் வந்தால் குறைந்த பட்சம் 20 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் போவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும் கடைசி வரை ஆர்சிபி அணியில் விளையாடுவேன் என்று கூறும் அவரது ராஜ விசுவாசம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.